பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரிய வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
PMCARESfund,SC,reserves,order,Supreme Court, நன்கொடை,பிரதமர்,நிவாரணநிதி, சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், உத்தரவு பிறப்பிக்காமல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்தது.

கொரோனா நிவாரண உதவிக்காக, பிரதமர் மோடியின் தலைமையில், பி.எம்.கேர்ஸ் என்ற நிதியம், அமைக்கப்பட்டுள்ளது. இந்நிதியத்திற்கு ஏராளமான நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், நன்கொடை அளித்து உள்ளனர். இந்நிலையில், பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி, சி.பி.சி.எல்., எனும் தனியார் தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தது.


latest tamil news



இந்த வழக்கை அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 'பி.எம் கேர்ஸ் நிதி என்பது தாமாக முன்வந்து நன்கொடை வழங்குவோரிடம் இருந்து பெறும் அறக்கட்டளை. தேசிய பேரிடர் நிதி, மாநிலப் பேரிடர் நிதிக்கு வழக்கம்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது' என மத்திய அரசு விளக்கம் அளித்தது.

மனுதாரர் தரப்பில், 'பி.எம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளிப்பவர்களைப் பற்றி எந்த சந்தேகம் இல்லை. ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்துக்கு முரணாக பி.எம் கேர்ஸ் நிதி இருக்கிறது. தேசிய பேரிடர் நிதி அமைப்பு, மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரியால் தணிக்கை செய்யப்படுவதைப்போல, பி.எம் கேர்ஸ் நிதியும் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்' என வாதிடப்பட்டது.


latest tamil news



இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் உத்தரவு எதுவும் பிறப்பிக்காமல், தீர்ப்பை ஒத்தி வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
28-ஜூலை-202013:57:41 IST Report Abuse
Rafi வெளிப்படை தன்மை இல்லாத நிகழ்வுக்கு, அரசின் துணை என்பது விசித்திரமாக இருக்கின்றது.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
27-ஜூலை-202022:33:41 IST Report Abuse
தல புராணம் மோடி சிட் பண்டு, மோடி சீட் பண்டு.. இதிலே பணம் போட்டா கணக்கு காட்ட மாட்டோம்..
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
27-ஜூலை-202020:45:06 IST Report Abuse
GMM கருவூல பணம் மக்கள் வரிப்பணம் . அரசு தணிக்கைக்கு உட்படும் . அரசு பட்ஜெட் பணம் செலவிட விதிமுறைகள் உள்ளன . விதிமுறை பின்பற்ற படுகிறதா என்று தணிக்கை உண்டு . பிஎம் கேர் நன்கொடை பணம் . விதி முறை இல்லாமல் தணிக்கை செய்ய முடியாது . மனு பொதுநலம் எனில் தொண்டுநிறுவனம் அனைத்தையும் தணிக்கை செய்ய வேண்டும் . தணிக்கை கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் . காலவிரய மனு . அபராதம் விதிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X