பொது செய்தி

இந்தியா

மேலும் 47 சீன மொபைல் 'ஆப்'களுக்கு மத்திய அரசு அதிரடித் தடை

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
chinese apps, banned, India

புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில், சீன நிறுவனத்தின் மேலும் 47 மொபைல் 'ஆப்'களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.


latest tamil news


கல்வான் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, டிக்டாக், ஹலோ, ஷேர் இட், யுசி பிரவுசர், மெயில் மாஸ்டர், பேரலல் பேஸ், விவோ வீடியோ, கேம் ஸ்கேனர், எம்ஐ கம்யூனிட்டி, வீகோ வீடியோ, வீசாட், கிளப் பேக்டரி, யூகேம் மேக்கப் உள்ளிட்ட 59 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு கடந்த மாதம் அதிரடியாக தடை விதித்தது.

இந்நிலையில், தற்போது மேலும் 47 சீன மொபைல் 'ஆப்'களுக்கு தடை விதித்துள்ளது. ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட 59 சீன மொபைல் ஆப்களின், குளோனிங் செயல்களாக இந்த ஆப்கள் செயல்பட்டதால், தடை விதிக்கப்ட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், தடை விதிக்கப்பட்ட 'ஆப்'களின் பட்டியல் வெளியிடப்படவில்லை.


latest tamil news



இதுவரை சீனாவின் 106 மொபைல் 'ஆப்'களுக்கு மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பப்ஜி, அலிபாபா உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட சீன 'ஆப்'களுக்கு தடை விதிப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
28-ஜூலை-202016:15:14 IST Report Abuse
l vijayaraghavan இந்த சீன ஆப்புக்கள் வருவதற்கு முன் நாம் எல்லாம் சொத்துக்கு லாட்டரி அடித்துக் கொண்டா இருந்தோம்? ஒரு பங்கு இவற்றால் உபயோகம் என்றால் ஆயிரம் பங்கு பாதிப்பு அதாவது இளைஞர்களின் பண்பு, செயல்திறன், ஊக்கம், ஆக்கத் திறன், நம் அன்னியச் செலாவணி, உற்பத்தித் திறன் இவற்றிற்கு இந்த சீன செயலிகள் ஆப்பு வைத்துக் கொண்டிருந்தன என்பது தான் உண்மை, அவர்கள் நாட்டில் இத்தகைய சீர்குலைவுகளை நிகழ்த்த அனுமதிப்பார்களா? எல்லாமே அடுத்தவனை அழிக்கும் நோக்கத்தில் அதே சமயம் அங்கிருந்து பணத்தைச் சுருட்டவென்றே உருவாக்கப்பட்டவை தான். இப்போதாவது விழித்துக் கொண்டார்களே. இந்தத் துணிச்சல் 'அந்தக்"கூட்டத்தின் கையில் நாடு இருந்தால் வருமா?
Rate this:
Cancel
Muguntharajan - Coimbatore,இந்தியா
28-ஜூலை-202006:48:06 IST Report Abuse
Muguntharajan இதுக்கெல்லாம் அவன் ஒன்னும் பயப்படுற மாதிரி தெரியல. வேற ஏதாவது உருப்படியா செஞ்சா நல்லது.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜூலை-202021:34:26 IST Report Abuse
தமிழ்வேல் இதுபோன்ற சில்லறை விஷயங்களுக்கு தடைசெய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், அனைத்து இறக்குமதிகளுக்கும் துணிந்து தடையை அறிவியுங்கள். கொரோன ஊரடங்கின்போது சீனப் பொருட்கள் வராமல் இருந்ததில் நாம் ஒன்று இறந்துவிடவில்லை. பணிந்து வந்தபின் திறந்துவிடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X