மேலும் 47 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடித் தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மேலும் 47 சீன மொபைல் 'ஆப்'களுக்கு மத்திய அரசு அதிரடித் தடை

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (4)
Share
chinese apps, banned, India

புதுடில்லி: இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் வகையில், சீன நிறுவனத்தின் மேலும் 47 மொபைல் 'ஆப்'களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.


latest tamil news


கல்வான் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, டிக்டாக், ஹலோ, ஷேர் இட், யுசி பிரவுசர், மெயில் மாஸ்டர், பேரலல் பேஸ், விவோ வீடியோ, கேம் ஸ்கேனர், எம்ஐ கம்யூனிட்டி, வீகோ வீடியோ, வீசாட், கிளப் பேக்டரி, யூகேம் மேக்கப் உள்ளிட்ட 59 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு கடந்த மாதம் அதிரடியாக தடை விதித்தது.

இந்நிலையில், தற்போது மேலும் 47 சீன மொபைல் 'ஆப்'களுக்கு தடை விதித்துள்ளது. ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட 59 சீன மொபைல் ஆப்களின், குளோனிங் செயல்களாக இந்த ஆப்கள் செயல்பட்டதால், தடை விதிக்கப்ட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், தடை விதிக்கப்பட்ட 'ஆப்'களின் பட்டியல் வெளியிடப்படவில்லை.


latest tamil news



இதுவரை சீனாவின் 106 மொபைல் 'ஆப்'களுக்கு மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பப்ஜி, அலிபாபா உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட சீன 'ஆப்'களுக்கு தடை விதிப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X