இந்தியாவின் ரபேல் - சீனாவின் ஜே-20: எது சிறந்த போர் விமானம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் ரபேல் - சீனாவின் ஜே-20: எது சிறந்த போர் விமானம்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (18)
Share
புதுடில்லி: பிரான்சில் இருந்து வந்த ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் வரும் 29 ல் சேர்க்கப்பட உள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமாக பல விமானங்கள் இருந்தாலும், அதில் ரபேல் தான் அதிநவீன விமானங்கள் ஆகும்.லடாக்கில், இந்திய எல்லையில் அத்துமீறிய சீனா பல போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. சீன விமானப்படை சுகோய் சு 27, சு 30 எம்கேகே சூ- 355, செங்கு ஜே7, செங்கு ஜே-10 விமானங்களை
இந்தியா, ரபேல் ,சீனா, ஜே-20,  போர் விமானம்

புதுடில்லி: பிரான்சில் இருந்து வந்த ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் வரும் 29 ல் சேர்க்கப்பட உள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமாக பல விமானங்கள் இருந்தாலும், அதில் ரபேல் தான் அதிநவீன விமானங்கள் ஆகும்.

லடாக்கில், இந்திய எல்லையில் அத்துமீறிய சீனா பல போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. சீன விமானப்படை சுகோய் சு 27, சு 30 எம்கேகே சூ- 355, செங்கு ஜே7, செங்கு ஜே-10 விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இத்தனை விமானங்கள் இருந்தாலும் செங்குடு ஜே-20 விமானங்கள் தான் பல அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது. இந்த விமானத்திற்கும், நமது ரபேல் போர் விமானங்களையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் தயாரித்துள்ள ரபேல் போர் விமானங்கள் இரட்டை இன்ஜீன்கள் கொண்டவை, பல முனை தாக்குதல் போர்விமானங்கள் ஆகும். இவை 4.5 தலைமுறை வகையை சேர்ந்தவை. 3,700 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும். மணிக்கு 2130 கி.மீ., தூரம் பறக்கும். 15.27 மீ., நீளமும், 10.80 மீ., அகலமும், 5.34 மீ., உயரமும் கொண்ட இந்த விமானங்கள், காலியாக இருக்கும் போது 10.3 டன் எடை கொண்டதுடன், அதிகபட்சமாக 24.5 டன் எடையும் சுமக்கும் திறன் கொண்டது.

ஆனால், ஜே-20 ஒரு இருக்கை, இரட்டை ஜெட் இன்ஜீன்கள் கொண்டதுடன் 5வது தலைமுறையை சேர்ந்த இந்த விமானத்தை சீனாவின் செங்குடு ஏரோஸ்டேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இது மணிக்கு 2,223 கி.மீ., தூரம் பறக்கும்திறன் பெற்றது. 20.4 மீ., நீளமும், 13.5 மீ., அகலமும், 4.56 மீ., உயரமும் கொண்ட இந்த விமானங்கள், காலியாக இருக்கும் போது 19.4 டன் எடை கொண்டதுடன், அதிகபட்சமாக 36 டன் எடையும் சுமக்கும் திறன் கொண்டது.


latest tamil news

ரேடார்


எதிரிகளின் போர் விமானம் அல்லது இலக்குகளை கண்டறிய ரேடார் பயன்படுத்தப்படும், ஜே-20 போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ரேடார் குறித்து சீனா தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஆக்டிவ் எலெக்டரானிக்கல்லி ஸ்கேன்ட் அர்ரே வரை அதிநவீன ரேடார் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தகவல் தெரிவிக்கின்றன. ரபேலிலும் இதே ரேடார் வகையை தான்பயன்படுத்தப்படுகிறது.

இரண்டு விமானங்களும் வான்வெளி தாக்குதலுக்கும், பல முனை தாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், இரண்டும், வானில் இருந்து வானில் உள்ள இலக்குகள், தரையில் உள்ள இலக்குகள், கப்பல்களை தாக்கவும், அணு ஆயுத பொருட்களை கண்டறியவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்றவாறு அந்த விமானங்களில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதற்கேற்றவாறு, ரபேலுடன் ஸ்கால்ப்(ScalP) மற்றும் மீடியார் (Meteor) என்ற இரண்டு பெரிய ஆயுத அமைப்புகளை இந்திய விமானப்படை வாங்க உள்ளது. இதில் ஸ்கால்ப் என்பது தரையில் உள்ள இலக்குகளை துல்லியமான தாக்குதல் நடத்தும் ஆயுதம். மீடியார் என்பது, வானில் இருந்து வானில், பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணை ஆகும்.

அதன்படி வானில் இருந்து வானில் ஜே-20 விமானத்தால் 200 கி.மீ.,க்கு அப்பால் உள்ள இலக்குகளையும், ரபேலால் 150 கி.மீ., தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்கும். அப்போது ஜே-20, மணிக்கு 4,939 கி.மீ., வேகத்திலும், ரபேல் மணிக்கு 4,248 கி.மீ., வேகத்திலும் பறக்கும் திறன் பெற்றது.


ஸ்டீல்த் தொழில்நுட்பம்


ஜே-20 போர் விமானம் 5வது தலைமுறையை சேர்ந்தது என சீன தெரிவித்துள்ளது. அதில், ஸ்டீல்த் தொழில்நுட்பம் திறன் கொண்டது. இதன்படி, இந் த போர் விமானம், ரேடாரில் சிக்காது. இந்த விமானங்கள் எதிரியின் ரேடாரை தாண்டும் போது, கண்டுபிடிப்பது கடினம்..

அதே ஸ்டீல்த் தொழில்நுட்பம் காரணமாக, தங்களது எப்-200 போர் விமானம், அனைத்து போர் விமானத்தை காட்டிலும் முன்னிலை வகிப்பதாக அமெரிக்கா தெரிவித்தது. ஆனால், 2009 ல் ஐக்கிய அரபு எமீரேட்சில் நடந்த பயிற்சியின் போது ரபேல் விமானங்கள். எப்-200 விமானத்தை கண்டுபிடித்தது. எப்-22 விமானத்தை மாதிரியாக கொண்டு ஜே-20 விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. அ தேநேரத்தில், ஜே20 விமானத்தை சூ-30எம்கேஐ போர் விமானம் ரேடார் மூலம் கண்டுபிடித்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இதனால், ஜே-20 ல் உள்ள ஸ்டீல்த் தொழில்நுட்பத்தின் திறன் குறித்து விமானப்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


latest tamil newsரபேல் போர் விமானத்தில் ஸ்டீல்த் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அதேநேரத்தில், ரேடாரில் இருந்து தப்பிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்டரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், ரபேல் விமானத்தை ஜே-20 விஞ்ச முடியாது.

செங்குடு ஜே-20 போர் விமானம் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதில்லை. அதன் திறன் குறித்து செய்திகளாக தான் உள்ள. ஆனால், ரபேல் விமானங்கள், ஆப்கன், லிபியா, மாலி, மத்திய ஆப்ரிக்க குடியரசு, ஈராக் மற்றும் சிரியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எதிர்பாராதவிதமாக, இரு விமானங்களும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டியிருந்தால், அதன் பலன்கள், இந்த தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்திருக்காது. விமானிகளின் பயிற்சி, எதிரிகளின் போர் விமானத்தை வீழ்த்த போடப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றை சார்ந்ததாக தான் இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி ஏர் மார்ஷல் தீரஜ் குக்ரேஜா கூறுகையில், சீனா சொல்வது போல் ஜே20 ல் சூப்பர் ஸ்டீல்த் தொழில்நுட்பம் ஏதும் இல்லை. அந்த விமானத்தை இந்திய ரேடார்கள் கண்டுபிடித்துவிடும். இதனால், அவர்கள் புதிய இன்ஜீனை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் முடியாததால், ரஷ்ய இன்ஜீன்களை பயன்படுத்துகின்றனர்.
சீன விமானங்கள், திபெத் விமானப்படைதளத்தில் இருந்துதான் கிளம்பும். அவை 4 ஆயிரம் மீ., உயரத்தில் உள்ளது. அங்கு காற்று குறைவாக உள்ளதால், அந்நாட்டு விமானத்தால், முழு அளவு எரிபொருள் மற்றும் ஆயுதங்களை முழுமையாக பயன்படுத்த முடியாது. ஆனால், இந்தியாவில் கீழ் தளத்தில் இருந்து விமானங்களை இயக்கப்படுவதால், ஆயுதங்கள் அனைத்தையும், பொருத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X