அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பு: முதல்வர் இபிஎஸ் வரவேற்பு

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

சென்னை:மருத்துவ படிப்பில், ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன். அதிமுக அரசு எடுத்த நடவடிக்கையால்தான் இந்த சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.



latest tamil news



இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-சமூகநீதி காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் சிறப்பாக மக்கள் பணியாற்றும் அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.


latest tamil news



முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் கூறப்பட்டிருந்ததாவது:இட ஒதுக்கீடு வழங்க, விரைவாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இட ஒதுக்கீடு கோர ஓ.பி.சி., பிரிவினருக்கு உரிமை உள்ளது. அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது. வழங்க எந்த தடையும் இல்லை. குறைந்தபட்ச கல்வி தகுதியை மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும். மத்திய , மாநில அரசுகள் மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசித்து இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வேண்டும்.மாநில அரசுகளுடன் ஆலோசித்து, மத்திய அரசு 3 மாதங்களில் முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூலை-202021:40:02 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் வண்டு முருகன் ::: இந்நிலையில் இந்தத் தீர்ப்பைப் பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்று வரும் நிலையில் தமிழக பா.ஜ.க.வும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் எல்.முருகன். பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் உயர்வுக்காக தொடர்ந்து பா.ஜ.க. பாடுபடும். அந்தர் பல்டி ஆகாச பல்டி
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27-ஜூலை-202021:27:15 IST Report Abuse
ஆரூர் ரங் ஊருக்குத்தானே உபதேசம்? குடும்ப டாக்டர்ன்னா ஆரிய ராமமூர்த்தி வக்கீலுன்னா ஆரிய ராமன் கட்சிக்கு ஆலோசகர்ன்னா ஆரிய பிகே அட பிரதமர் பதவிக்குகூட கவுல் பிராமணரைத் தான் ஆதரிப்போம் .பாஜக மாதிரி பிற்பட்டோரை பிரதமர் தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்க நாங்க ஒன்றும் இளிச்சயவர்களல்ல. .ஏமாந்தவர்கள் ஒதுக்கீட்டில் படித்த ஆட்களை வேலைக்கு வைத்துக்கொள்ளவும். ஊருக்குத்தான் நாங்க உபதேசம் செய்வோம்
Rate this:
27-ஜூலை-202021:40:55 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் இதற்கு தான் பெரியார் சொன்னார் பாம்பை அடிக்காதே என்று புரிகிறதா...
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27-ஜூலை-202021:22:48 IST Report Abuse
ஆரூர் ரங் அண்ணா எம்ஜியார் ஜெயா என உங்க முன்னோடிகள் எல்லாமே பட்டியல்படி முற்பட்டவர்கள் . ஆனா என்ன ? சட்டப்படி பட்டியலினத்தாருக்கு 18விழுக்காடு ஒதுக்கீட்டை மாவட்ட செயலாளர் மந்திரி முதல்வர் மட்டத்தில் செயல்படுத்த தயாரா? திமுகவே செய்யாததை உங்ககிட்ட எதிர்பார்க்கமுடியுமா ?
Rate this:
27-ஜூலை-202021:44:52 IST Report Abuse
அண்ணா வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் PAAVAM UNNAI IPPADI PULAMBI PULAMBI SAGA PORA...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X