லடாக்கில் சீன அத்துமீறல் இல்லை என பொய் கூற மாட்டேன்: ராகுல்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

புதுடில்லி: எனது அரசியல் வாழ்க்கை அஸ்தனமாகினாலும், லடாக்கில் சீன அத்துமீறல் இல்லை என பொய் கூற மாட்டேன் என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.



latest tamil news


கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள் தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன ராணுவம் அத்துமீறலை மத்திய அரசு கண்டிக்கவில்லை என, அப்போது இருந்தே, மத்திய அரசை ராகுல் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது: தேசமும், மக்களும்தான் இந்தியனான எனக்கு முக்கியத்துவம். இந்திய எல்லையை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. எனக்கு இது வேதனை அளிக்கிறது. வெளிப்படையாக கூற வேண்டுமெனில், எனது ரத்தம் கொதிக்கிறது.


latest tamil news



இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இதுகுறித்து செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பார்த்துவிட்டேன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களிடம் பேசிவிட்டேன். நம் எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழையவில்லை என, என்னை நீங்கள் பொய் சொல்ல சொன்னால், நான் பொய் கூறமாட்டேன். பொய் சொல்ல முடியாது எனவும் சொல்வேன். எனது அரசியல் வாழ்க்கை முழுவதும் அஸ்தமனமானாலும் கூட, நான் பொய் சொல்லமாட்டேன்.

நம் நாட்டு எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறவில்லை என யார் பொய் சொல்கிறார்களோ. அவர்கள் தேசபக்தர்கள் அல்ல; தேசியவாதிகள் அல்ல. எனக்கு அரசியல் வாழ்க்கையே இல்லையென்றாலும் கவலையில்லை, ஆனால் சீன அத்துமீறலை பொறுத்தவரை நான் உண்மையைச் சொல்லப் போகிறேன். இவ்வாறு அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthuraman - Wasington DC,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-202000:11:09 IST Report Abuse
Muthuraman எந்த ஒரு பிரச்சினையும் தெளிவாக ஆராயாமல் அவசரக்குடுக்கை மாதிரி எதோ ஒரு பேச்சு பேசுவதே இவரின் வேலை..பின் மற்றவர் சாடினால் ஜகா வாங்குவது ..முதலில் உங்க கட்சியை பாருங்கள் சார்..நீங்க பொறுப்பில் உள்ள ராஜிவ் காந்திநிறுவனம் மற்றும் நீங்கள் கையெழுத்து செய்த சீனா-காங்கிரஸ் உடன்பாடு பற்றி கவலை படுங்கள் சார்...உங்கள் பேச்சை உங்கள் கட்சிக்காரர்களே கேட்பது இல்லை. பின் ஏன் இந்த வேடிக்கை?
Rate this:
Cancel
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
27-ஜூலை-202023:50:19 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman ஹரிச்சந்திரா தாங்க முடியலையே
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
27-ஜூலை-202023:22:09 IST Report Abuse
unmaitamil உனக்கே தெரியுது நீ அஸ்தமமாகிவிட்டாய் என்று . உன் கட்சியும் கறைந்து அழிந்து விட்டது . நீ ஒரு பொய் பேசும் டுபாக்கூர் என்று என்றோ மக்களுக்கு புரிந்துவிட்டது. பாக்கி உள்ள மதிப்பை காப்பாற்ற குடும்பத்தோடு இத்தாலிக்கு ஓடிவிடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X