லடாக்கில் சீன அத்துமீறல் இல்லை என பொய் கூற மாட்டேன்: ராகுல்| Dinamalar

லடாக்கில் சீன அத்துமீறல் இல்லை என பொய் கூற மாட்டேன்: ராகுல்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (12)
Share
புதுடில்லி: எனது அரசியல் வாழ்க்கை அஸ்தனமாகினாலும், லடாக்கில் சீன அத்துமீறல் இல்லை என பொய் கூற மாட்டேன் என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள் தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம்

புதுடில்லி: எனது அரசியல் வாழ்க்கை அஸ்தனமாகினாலும், லடாக்கில் சீன அத்துமீறல் இல்லை என பொய் கூற மாட்டேன் என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.



latest tamil news


கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள் தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன ராணுவம் அத்துமீறலை மத்திய அரசு கண்டிக்கவில்லை என, அப்போது இருந்தே, மத்திய அரசை ராகுல் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது: தேசமும், மக்களும்தான் இந்தியனான எனக்கு முக்கியத்துவம். இந்திய எல்லையை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. எனக்கு இது வேதனை அளிக்கிறது. வெளிப்படையாக கூற வேண்டுமெனில், எனது ரத்தம் கொதிக்கிறது.


latest tamil news



இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. இதுகுறித்து செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பார்த்துவிட்டேன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களிடம் பேசிவிட்டேன். நம் எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழையவில்லை என, என்னை நீங்கள் பொய் சொல்ல சொன்னால், நான் பொய் கூறமாட்டேன். பொய் சொல்ல முடியாது எனவும் சொல்வேன். எனது அரசியல் வாழ்க்கை முழுவதும் அஸ்தமனமானாலும் கூட, நான் பொய் சொல்லமாட்டேன்.

நம் நாட்டு எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறவில்லை என யார் பொய் சொல்கிறார்களோ. அவர்கள் தேசபக்தர்கள் அல்ல; தேசியவாதிகள் அல்ல. எனக்கு அரசியல் வாழ்க்கையே இல்லையென்றாலும் கவலையில்லை, ஆனால் சீன அத்துமீறலை பொறுத்தவரை நான் உண்மையைச் சொல்லப் போகிறேன். இவ்வாறு அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X