மேகாலயாவில் கொரோனா ; ஷில்லாங்கில் 72 மணிநேரம் ஊரடங்கு அமல்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ஷில்லாங் : மேகாலயாவின் ஷில்லாங் நகரில் கொரோனா பாதிப்புகளையொட்டி 72 மணிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேகாலயாவிலும் தொற்று பாதிப்புகளை குறைக்க மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தலைநகர் ஷில்லாங்கில் தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் நோய் தொற்று தீவிரமடைந்துள்ளதால் ஏற்கனவே 30 வட்டாரங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளன. இந்த மாவட்டத்தில் 441 பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்டத்தின் துணை ஆணையர் மாட்சிவேடர் டபிள்யூ நோங்பிரி கூறுகையில், ஷில்லாங்கில் இன்று முதல் 3 நாட்களுக்கு (72 மணிநேரம்) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அனைத்து முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளையும் கண்காணிக்க சுகாதார ஊழியர்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவர், மேலும் நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க சீரற்ற சோதனைகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு கூறினார். இதற்கிடையில் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் இரண்டு போலீஸ் ஸ்டேஷன்கள் மூடப்பட்டன. அங்கு சில பாதிப்புகளும் உறுதியானதாக கூறப்படுகிறது.


latest tamil news



இரண்டு போலீஸ் ஸ்டேஷன்களும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு பணியாளர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். ஷில்லாங்கில் கடந்த 2 நாட்களில் 56 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 37 பேர் ஆயுதப்படை வீரர்கள். இவர்களில் 23 பேர் எல்லை பாதுகாப்பு படையை (BSF) சேர்ந்த வீரர்கள் என தெரியவந்தது. மேலும் மேகாலயாவில் தொற்று பாதிப்புகளை குறைக்க மாநிலத்தில் உள்ள முக்கிய நுழைவு பகுதிகளை, ஜூலை 24 முதல் 31 வரை மூட அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் கான்ராட் சங்மா சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். மேகாலயாவின் பைர்னிஹாட், ரடாச்செரா, பாஜெங்டோபா, டிக்ரிக்கில்லா, மிர்ஜும்லா மற்றும் ஹாலிடாய்கஞ்ச் ஆகிய 6 நுழைவு பகுதிகள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


latest tamil news



மேகாலயாவில் 543 பேர் சிகிச்சையில் உள்ளனர். 173 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நோய் தொற்றால் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X