பொது செய்தி

இந்தியா

எதிர்கால சந்ததிக்காக ராமர் கோயிலில் 2000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் 'டைம் கேப்சூல்'

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

அயோத்தி: ராமர் கோவில் மற்றும் ராமர் ஜென்ம பூமியின் வராலாறு பற்றி எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் தற்போது கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு அடியில் 2000 அடி ஆழத்தில் 'டைம் கேப்சூல்' புதைக்கப்படும் என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது. டைம் கேப்சூல் புதைக்கப்படுவதால் எதிர்காலத்தில் ராமர் ஜென்ம பூமி குறித்து எந்தவித சர்ச்சையும் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.



latest tamil news



முக்கியமான தகவல்களை எதிர்காலத் தேவைக்காக பாதுகாப்பதே டைம் கேப்சூல்: தற்கால நிகழ்வுகள், தகவல்கள், வரலாற்று குறிப்புகள், ஆவணங்கள் மற்றும் புகைபப்படங்கள் ஆகியவற்றை எதிர்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில், எளிதில் உடையாத வலிமையான குடுவைக்குள் வைத்து புதைத்து விடுவார்கள். இதன் மூலம் நிகழ்கால தகவல்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள முடியும்.

கடந்த 2019 ம் ஆண்டு அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது. தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியது. அத்துடன் மூன்று மாதத்திற்குள் ராமர் கோவில் கட்டுவதற்குரிய அறக்கட்டளையையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா எனும் அறக்கட்டளையை மத்திய அரசு ஏற்படுத்தியது.


latest tamil news



அயோத்தியில் வரும் ஆக., 5ம் தேதி பூமி பூஜை தொடங்குகிறது. அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால், ' அயோத்தி வழக்கில் நடந்த சட்டப் போராட்ட நிகழ்வுகளை எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் கோவிலுக்கு அடியில் 2000 அடி ஆழத்தில் ராமர் கோவில் பற்றிய தகவல்கள் அடங்கிய டைம் கேப்சூலை வைக்கப் போகிறோம். கோவில் கட்டுமானத்துக்காக பல்வேறு புனிதமான இடங்களில் இருந்தும் மண் கொண்டுவரப்படும். மேலும் ராமர் தன் வாழ்க்கை பயணத்தின் போது சந்தித்த நதிகளில் இருந்தும் புனித நீர் கொண்டுவரப்பட்டு பூஜைக்கு பயன்படுத்தப்படும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
28-ஜூலை-202016:29:47 IST Report Abuse
natarajan s தமிழ் நாட்டிலும் ஒருவர் தனது(பொய்யாக ) பராக்கிரமங்களை பட்டியல் இட்டு TIME CAPSULE புதைத்தார், பின்னர் அது எடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது .
Rate this:
Cancel
Mahesh - chennai,இந்தியா
28-ஜூலை-202014:32:43 IST Report Abuse
Mahesh 2000 அடியா 200 அடியா
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-202014:07:03 IST Report Abuse
SAPERE AUDE இது அவசியமா என யோசிக்க வேண்டும் .ராமர் கோயில் பக்தர்கள் வந்து தரிசித்து ஆசிபெறவே தவிர எதிர்கால சந்ததியினர் அதன் சரித்திரத்தை அறிய இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X