பொது செய்தி

இந்தியா

ஐதராபாத்திலும் விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட முடிவு

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும் என பாக்யநகர் கணேஷ் உத்தவ் சமிதி அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் வலியுறுத்துகிறது. இந்நிலையில் ஆக.,22 ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்களுக்கு கொண்டாடப் படுவது வழக்கம். மற்ற இடங்களை விட மஹாராஷ்டிராவில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். ஆனால் தற்போது தொற்று பாதிப்புகளால் விழாவை ஆரம்பரம் இல்லாமல்எளிமையாக நடத்த மஹா.,முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா ஆக.,22 முதல் செப்.,1 வரை கொண்டாடப்பட உள்ளது. ஆயினும் இந்த ஆண்டு தொற்று பரவலால் விநாயகர் ஊர்வலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும். சிலைகளை நீரில் கரைப்பது மற்றும் விழாக்களை எளிமையாக கொண்டாடுவது குறித்து பாக்யநகர் கணேஷ் உத்தவ் சமிதி இன்று, பந்தல் அமைப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் சாமி சிலைகளை ஏரிகள் அல்லது சிற்றோடைகளில் கரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

சதுர்த்தி விழாவில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தமாக வைத்து கொள்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை செயல்முறைகளை கடைபிடிக்க வேண்டும். விநாயகர் சிலைகளை பிரம்மாண்டமாக அமைக்க வேண்டாம் என்றும் பண்டிகையை ஆரவாரமாக கொண்டாட வேண்டாம். யாருக்கும் பாதிப்பு தராதவகையில் பாதுகாப்பாக கொண்டாட பந்தல் அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


latest tamil news



இது தொடர்பாக உத்சவ் சமிதியின் செயலாளர் ஆர். சஷிதர் கூறுகையில், அனைத்து பந்தல் அமைப்பாளர்களும் மாநில மற்றும் மத்திய அரசுகள் வழங்கிய கொரோனா வழிகாட்டுதல் களைப் பின்பற்ற வேண்டும். மிக முக்கியமாக, நீரில் சிலைகளை கரைக்கும் நாளில், குறைந்தது 4 முதல் 5 பேர் சமூக இடைவெளியை உறுதி செய்வதற்கான வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
இளைஞர்கள் மற்றும் சங்கங்களும் சிறிய சிலைகளை அமைத்து ஆரவாரத்தை தவிர்க்க வேண்டும். அவற்றின் அருகிலுள்ள குளங்கள் மற்றும் ஏரிகளிலும் நீரில் கரைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. தொற்று பாதிப்புகளை குறைக்க இறைவனிடம் பிராத்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-ஜூலை-202003:57:02 IST Report Abuse
J.V. Iyer ஊடகத்தில் சிறப்பாக கொண்டாடலாம். கரோனா, கறுப்பர் கூட்டம், ஹிந்து கடவுளர் எதிர்ப்பாளர்கள், விஷ கூட்டங்கள், தமிழ் நாட்டு விஷக்கிருமிகள் ஒழிய பிரார்த்திக்கலாம். முருகன் சகோதரர் மூலம் பலன் கிடைக்கும்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
27-ஜூலை-202021:30:27 IST Report Abuse
sundarsvpr எல்லா நாட்களும் பிறந்த நாட்கள் தான் வீட்டில் அசம்பாவிதம் ஏற்பட்டால் இன்று நடக்கவேண்டிய சுப நிகழ்ச்சியை நல்ல நாள் பார்த்து வேறு நாளில் கொண்டாடுகிறோம். கொரோனா முடிவிற்கு பிறகு வரும் சதுர்த்தியில் கோலாகலமாய் கொண்டாடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X