ராமர் கோவில் பூமி பூஜை விழா: உத்தவுக்கு அழைப்பில்லை?

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

மும்பை: ராமர்கோவில் பூமி பூஜை விழாவிற்கு மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ்தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.



latest tamil news



வரும் ஆக. 5-ம் தேதி உ.பி., மாநிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணி பூமி பூஜையுடன் துவங்க உள்ளது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமை்சர்கள், ஆர்.எஸ்.எஸ் தலைவரகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பூமி பூஜை விழாவை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தலாம் என ஆலோசனை தெரிவித்து இருந்தார். மேலும் கட்சி ஆதரவு பத்திரிகையான சாம்னாவில் இது ஒரு சாதாரண கோயில் அல்ல. நாம் இன்று கொரோனாவுடன் போராடி வருகிறோம். மத கூட்டங்களுக்கு தடை செய்யப்பட்டடுள்ளன. விழாவிற்கு நான் அயோத்தி செல்லலாம். ஆனால் ராம் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டு வருவர். அவர்களை நீங்கள் தடுப்பீர்களா என வே பூமி பூஜையை வீடியோ மாநாடு மூலம் நடத்தலாம் என கருத்து தெரிவித்து இருந்தார்


latest tamil news



முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இந்த கருத்துக்கு விஎச்பி கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளது. இதன் காரணமாகவே உத்தவ்விற்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

முன்னதாக உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்ற பின்னர் 100 வது நாள் கொண்டாடும் வகையில் அயோத்தி சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
03-ஆக-202023:24:49 IST Report Abuse
madhavan rajan அவரு கொரோனா தோற்று தாக்கி மருத்துவமனையில் உள்ளார். அப்படியே வந்துடப்போறார். எப்போ பாஜக நல்லது செய்யாதுன்னு கூட்டணியிலிருந்து பதவி ஆசையில் விளக்கினாரோ அப்பவே இந்த மரியாதையெல்லாம் எதிர் பார்க்கக்கூடாது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-ஆக-202004:27:25 IST Report Abuse
J.V. Iyer எதற்கு அனுப்பவேண்டும்? பிறகு ஸ்டாலின் தனக்கு அழைப்பு அனுப்பவில்லை என்று போராட்டம் நடத்துவார்
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
28-ஜூலை-202006:08:55 IST Report Abuse
Indhuindian மும்பை மாநகரில் ஒரு ஸ்டாலின். முதல்லே கர் சேவா நாங்கதான் ஆரம்பிச்சோம்ன்னு ஒரு பீலா அப்புறம் உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்த பிறகு அயோத்யாவுக்கு ஒரு விசிட். பூமி பூஜைக்கு போவேன்னு சொல்லி ஒரு பில்ட் அப் ஏன்னா அப்படியாவது நமக்கு ஒரு நோட்டீஸ் வைப்பாங்களான்னு ஒரு நப்பாசையில். அவங்க இவரை சீண்டவேயில்லை நோட்டீசும் வைக்கலே சரி பீட்ட திருப்பி போடுவோம் இப்ப எதுக்கு பூமி பூஜை. ஏன் சார். இது தான் தீவிர இந்துவான உங்க தகப்பனார் பாலா சாஹிப் தாக்கரேவுக்கு கொடுக்கும் மரியாதையா? நிஜமாகேவே இந்துவாக இருந்தால் அவங்க கூப்பிடலீனா பரவாயில்லே சீக்கிரமா மந்திர் வந்தா சரின்னு சொல்றத விட்டு அம்மையாருக்கும் பவாருக்கும் குலாமாயிட்டிங்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X