தெலுங்கானாவில் ஒரே நாளில் 774 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் நோய் தொற்றில் இருந்து 774 பேர் குணமடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. மாநிலத்தின் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,473 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. தெலுங்கானாவில் நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,532 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் கொரோனாவால் 8 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news



மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 774 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,106 ஆக அதிகரித்தது. நேற்று நிலவரப்படி, 12,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரு நாளில் 9,817 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 1,473 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தின்இறப்பு விகிதம் 0.85 சதவீதமாக உள்ளது. இதுவரை 3,63,242 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X