தேநீர் விருந்துக்கு அழைத்த பிரியங்காவை மதிய விருந்துக்கு அழைத்த பா.ஜ., எம்.பி.,

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

புதுடில்லி: டில்லியில் தான் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்ய உள்ள காங்கிரஸ் பொதுசெயலர் பிரியங்கா, தான் தங்கியிருந்த வீட்டுக்குப் புதிதாக குடியேற இருக்கும் பா.ஜ., எம்.பி., அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க அழைப்பு விடுத்தார். பதிலுக்கு, அனில் பலூனி பிரியங்காவை மதிய விருந்துக்கு அழைத்துள்ளார்.



latest tamil news



காங்., தலைவர் சோனியாவின் மகளும் காங்., பொதுச்செயலருமான பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த, சிறப்பு பாதுகாப்பு படையின் (எஸ்பிஜி) பாதுகாப்பு நீக்கப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு படையின் பரிந்துரைப்படி, 1997ல் பிரியங்காவுக்கு, டில்லியில், லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டது. ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார்.

இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கபட்டவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்புக்கான இடத்தில் தங்க அனுமதிக்க இயலாது. ஆகவே பங்களாவை ஜூலை 31க்குள் காலி செய்யுமாறும், வாடகை நிலுவை, ரூ.3.26 லட்சத்தை செலுத்துமாறும், மத்திய உள்துறை அமைச்சகம், பிரியங்காவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், பிரியங்கா, இம்மாத இறுதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய உள்ளார். ஹரியானா மாநிலம் குருகிராமில், செக்டார் 42 ல் டிஎல்எப் அராலியாவில் உள்ள வீட்டிற்கு தற்காலிகமாக குடி புக உள்ளார்.


latest tamil news



பிரியங்காவின் அரசு பங்களாவை, பா.ஜ., தேசிய ஊடகப்பிரிவு தலைவரும், எம்.பி.,யுமான அனில் பலூனிக்கு மத்திய வீட்டுவசதித்துறை ஒதுக்கியுள்ளது. ஆக.,1ல் வீட்டை காலி செய்ய பிரியங்கா அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். இந்நிலையில் தான் தங்கியிருந்த வீட்டுக்குப் புதிதாக குடியேற இருக்கும் பா.ஜ., எம்.பி., அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க பிரியங்கா கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

அனில் பலூனிக்கு வீடு சவுகரியமாக இருக்கிறதா அல்லது வீட்டில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா என கேட்டுத் தெரிந்துகொள்வதற்காகவும், மரியாதை நிமித்தமாகவும், நட்புக்காகவும் மட்டுமே தேநீர் விருந்தளிக்க பிரியங்கா அழைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


latest tamil news



இந்நிலையில், தேநீர் விருந்துக்கு அழைத்த பிரியங்காவை, மதிய விருந்துக்கு அனில் பலூனி அழைத்துள்ளார். இதுகுறித்து பிரியங்காவுக்கு கடிதம் எழுதியுள்ள பலூனி, தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புற்றுநோய் சிகிச்சைக்காக தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால், தேநீர் விருந்தை மறுத்துள்ளார். ஆனால், பிரியங்கா விரும்பும் ஆடம்பரமான மதிய விருந்து அளிக்கப்படும் என பலூனி உறுதியளித்தார். தான், அரசு பங்களாவுக்கு வந்த பின், குடும்பத்துடன் மதிய விருந்தில் கலந்து கொள்ள பிரியங்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
30-ஜூலை-202013:59:35 IST Report Abuse
Tamilnesan மத்திய அரசு எவ்வளவு மெத்தனமாக செயல்படுகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம். ப்ரியங்கா வதேரா பஞ்சாயத் வார்டு உறுப்பினர் கூட இல்லை. இப்படி இருக்க அரசு, மக்கள் வரி பணத்தில் எந்த அடிப்படையில் இவருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கிறது. இதை உச்சா நீதிமன்றம் எப்படி வேடிக்கை பார்க்கிறது. இந்த அட்டகாசங்களை தட்டி கேட்க நாட்டில் எந்த நாதியும் இல்லையா?
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
30-ஜூலை-202005:39:56 IST Report Abuse
NicoleThomson இவர் புருஷன் அவ்ளோ பெரிய ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் கம் டெவலப்பர் இன்னமும் ஏன் இவர் அரசு பணத்தை வீணடித்துக்கொண்டுள்ளார்
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
28-ஜூலை-202010:01:39 IST Report Abuse
Nallavan Nallavan ......... அது வரைக்கும் சந்தோசம் .........
Rate this:
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
28-ஜூலை-202012:50:52 IST Report Abuse
Nallavan Nallavanஅதற்க்கு அப்புறம் ஸ்மிர்தி ராணி ...............
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
02-ஆக-202012:20:08 IST Report Abuse
 Muruga Velஇல்லாட்டி நீங்க ரெண்டு பார்ட்டிகளும் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X