ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம்

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (4)
Advertisement
புதுடில்லி: கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான ஓய்வூதியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கும் வரை, தற்காலி ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, தாமதமின்றி, ஓய்வு பெறும் தினத்திலேயே
pension,Provisional Pension, assured, govt employees, retiring, பென்ஷன், ஓய்வூதியம்

புதுடில்லி: கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான ஓய்வூதியம் வழங்க உத்தரவு பிறப்பிக்கும் வரை, தற்காலி ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, தாமதமின்றி, ஓய்வு பெறும் தினத்திலேயே ஓய்வூதிய பட்டுவாடா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அலுவலக பணிகள் தற்போது தடைபட்டுள்ளன.


latest tamil newsவழக்கமான ஓய்வூதியம் வழங்க, ஓய்வூதியப் பட்டுவாடா உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, தற்காலிக ஓய்வூதியம் மற்றும் தற்காலிகப் பணிக்கொடை தடையின்றி வழங்க விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது. இதன்படி, ஓய்வுபெறும் நாளிலிருந்து 6 மாதங்கள் வரை அல்லது தவிர்க்க முடியாத பட்சத்தில், ஓராண்டு வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
28-ஜூலை-202017:41:09 IST Report Abuse
S.P. Barucha தயவு செய்து சட்ட சபை, நாடலு மன்ற மக்கள் பிரநிதிகளுக்கான எல்லா சலுகைகளையும் உடனடியாக நிறுத்துங்கள். ஒவ்வொரு மாநில அமைச்சர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
28-ஜூலை-202008:37:38 IST Report Abuse
Bhaskaran தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து ஓய்வூதியம் 2000 வாங்கும்எங்களை போன்ற பாபாத்மாக்கள் என்ன செய்வதுபல மாநிலஉயர்நீதிமன்றங்கள் சொல்லியும் அதை சட்டை செய்யாதஉள்ளார்கள் எங்கள் தலைவிதியை நினைத்துநொந்துகொள்ளத்தான் வேண்டும்
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
28-ஜூலை-202003:54:45 IST Report Abuse
B.s. Pillai Now a days, the trend is that the children whom we had brought up , do not think that it is their duty to look their parents in their old age. So it is in our own interest, we should keep our savings with us for rainy season. There are very few who respect and love their parents and take full care of them, but majority of the present population think that old people are burden. So we should save sufficient for living our life safely independently without the support of our kids. There are many senior homes on payment basis in Coimbatore where it is good to live. I have experienced such senior living homes for 6 months when I came to Kovai for my ayurveda treatment.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X