டிராக்டர் வழங்கி உதவிய சோனு சூட்டுக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (16)
Advertisement
திருப்பதி : ஆந்திராவில் எருதுகளுக்கு பதிலாக ஏரில் தன் இரு மகள்களை பூட்டி நிலத்தில் உழவு செய்த விவசாயிக்கு ஹிந்தி நடிகர் சோனு சூட் டிராக்டர் நன்கொடையாக அளித்து உதவினார். அவருக்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவரின் இரு மகள்களின் படிப்பு செலவை ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம்

திருப்பதி : ஆந்திராவில் எருதுகளுக்கு பதிலாக ஏரில் தன் இரு மகள்களை பூட்டி நிலத்தில் உழவு செய்த விவசாயிக்கு ஹிந்தி நடிகர் சோனு சூட் டிராக்டர் நன்கொடையாக அளித்து உதவினார். அவருக்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்தார். மேலும் அவரின் இரு மகள்களின் படிப்பு செலவை ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
latest tamil newsஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவ் என்பவர் நடத்தி வந்த தேநீர் கடை வியாபாரம் கொரோனா தொற்று பரவல் காரணமாக நசிந்து போனது. அதனால் அவர் தன் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட திட்டமிட்டார். ஆனால் டிராக்டர் மற்றும் உழவு மாடுகள் வாடகைக்கு வாங்க பணமில்லாததால் தன் இரு மகளை ஏரில் பூட்டி நிலத்தில் உழவு செய்தார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த ஹிந்தி நடிகர் சோனு சூட் மனவருத்தம் அடைந்து அவருக்கு டிராக்டர் வாங்கி தந்து உதவி செய்துள்ளார். நேற்று மாலை விவசாயியிடம் அந்த டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தந்தைக்கு உதவி செய்த பெண்களை படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறியிருந்தார்.


latest tamil newsஇந்நிலையில், சோனு சூட் செய்த உதவிக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: நாகேஷ்வரராவின் குடும்பத்திற்கு டிராக்டரை அன்பளிப்பாக வழங்கிய சோனு சூட்டை தொடர்புகொண்டு பேசி, அவருக்கு பாராட்டு தெரிவித்தேன். இந்தக் குடும்பத்தின் நிலை கருதி, இரு மகள்களின் கல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். அவர்களின் கனவு நனவாக உதவி செய்வேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Suburaman - nellore,இந்தியா
28-ஜூலை-202010:57:25 IST Report Abuse
Srinivasan Suburaman god bless you sonu sood keep continue the same and we know that many of them money but dont have big heart once again thanks for your helpiing hand
Rate this:
Cancel
28-ஜூலை-202010:39:12 IST Report Abuse
theruvasagan நம்ம விசில் ஹீரோக்கு தெரியாம போயிடுச்சே. தெரிஞ்சிருந்தா வெறும் அஞ்சே ரூவா செலவுல நெலத்துல வெள்ளாமையே பண்ணியே குடுத்துருப்பாரே. மய்ய நாயகர் இந்த அவலத்துக்கு மத்திய அரசுதான் காரணமுன்னு சொல்லி முடிய பிச்சுக்கிற மாதிரி கண்டன அறிக்கை வுட்டுருப்பாரே. இதெல்லாம் எவ்வளவோ பரவாயில்ல. டுமுக்கா கும்பல் மாத்திரம் அந்த ஊர்ல இருந்ததுன்னா நெலத்தை உழக்கூட வக்கில்லாத உனக்கு எதுக்கு நிலம் அப்படின்னு சொல்லி அந்த விவசாயிகிட்டயிருந்து கழனிய ஆட்டய போட்டுருக்கும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
28-ஜூலை-202009:46:11 IST Report Abuse
Girija இவருக்கு தெரியும் பைஸா செலவில்லாமல், விவசாயி மகள்களுக்கு சுலபமாக அவர் வளர்த்துவிட்ட கல்வி தந்தைகள் கல்லுரியில் பள்ளியில் சேர்த்துவிட்டு பெயர் வாங்கி கொள்ளலாம் என்று. இமயமலை அளவிற்கு ருபாய் நோட்டுகளை அடுக்கி வைத்திருக்கும் உங்களுக்கு வேறு விவசாய குடும்பங்களுக்கு அல்லது தாலூக்காவிற்கு ஒன்று என்று ஒரு டிராக்டரை வாங்கிக் கொடுத்து விவசாயிகளை பயனடைய செய்ய முடியாதா? ஒரு நடிகரே இவ்வளவு செய்யும்போது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X