மஹாராஷ்டிராவில் கொரோனா மீட்பு விகிதம் 56.74 சதவீதமாக உயர்வு | Dinamalar

மஹாராஷ்டிராவில் கொரோனா மீட்பு விகிதம் 56.74 சதவீதமாக உயர்வு

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020
Share
மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 56.74 சதவீதமாக உள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்தது.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. மாநிலத்தை பொறுத்தவரை பாதிப்பு அதிகமான பகுதிகளாக மும்பை, தாராவி மற்றும் நவிமும்பை

மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 56.74 சதவீதமாக உள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹா.,முன்னிலையில் உள்ளது. மாநிலத்தை பொறுத்தவரை பாதிப்பு அதிகமான பகுதிகளாக மும்பை, தாராவி மற்றும் நவிமும்பை போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன. தொற்று நோயை சமாளிக்க மாநிலத்தின் மும்பையில் சோதனை மையம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக இன்று சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், மஹாராஷ்டிராவில் புதிதாக 7,924 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,83,723 ஆக அதிகரித்தது. நோய் தொற்றுக்கு 227 பேர் புதிதாக பலியாகினர். மஹா.,வில் நோய் தொற்றில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,883 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



மாநிலத்தில் நோய் பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 8,706 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,21,944 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 56.74 சதவீதமாக உள்ளது. தற்போது 1,47,592 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாநிலத்தில் நோய் தொற்று காரணமாக 19,25,399பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X