சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கலெக்டராக நினைத்தேன்; ஆட்டோ ஓட்டுறேன்!

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 கலெக்டராக நினைத்தேன்; ஆட்டோ ஓட்டுறேன்!

தன் ஆட்டோவின் பின்புறத்தில், சித்த மருத்துவ குறிப்புகளை எழுதி, கோவை மக்களிடம் நல்ல பெயர் வாங்கியுள்ள, ஆட்டோ டிரைவர் நாகராஜ்: ஒரு பெரிய அதிகாரியாகி, பிறருக்கு வழிகாட்டியா இருக்கணும்னு நினைச்சேன். எனக்கு, 13 வயசா இருக்கறப்ப அம்மா இறந்துட்டாங்க; அம்மா போன கொஞ்ச நாள்லயே, அப்பாவும் என்ன விட்டுட்டு போய்ட்டாரு.அத்தை வீட்டில் வளர்ந்தேன்.

ஒன்பத-ாம் வகுப்பு வரை தான் படிக்க முடிஞ்சுது. அதன் பின், 10-ம் வகுப்பு, பிளஸ் 2, கல்லுாரி எல்லாமே, 'கரஸ்பான்டன்ட்ஸ்'ல தான் படிச்சேன்; பி.காம்., முடிச்சுருக்கேன்.சிவில் சர்வீஸ் தேர்வு எழுதணும்னு நினைச்சேன். சென்னை போனேன். நான்கு தடவை எழுதியும் தோல்வி. மீண்டும் கோவைக்கே வந்துவிட்டேன்.'டியூஷன் சென்டர்'களில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். சம்பளம் ரொம்ப கம்மியாக கொடுத்தாங்க. அதுக்கப்புறம் தான், ஆட்டோ ஓட்டலாம்னு முடிவு செஞ்சேன்.கோவை வந்த கொஞ்ச காலத்துலயே திருமணம் ஆகிடுச்சு.

வேற வழி இல்லாம தான் ஆட்டோ ஓட்டத் துவங்கினேன். ஆரம்பத்தில் இந்தத் தொழில் பத்தி, எனக்கு எதுவுமே தெரியாது. வாடகை பேசத் தெரியாது. பெட்ரோல், டீசல் விலை தினசரி ஏறிக்கிட்டே இருக்கும். ஆட்டோ மீட்டர் கொண்டு வந்து, எட்டு வருஷம் ஆகுது. அதுல இருக்கற விலை, இப்ப இருக்கற விலையில பாதி கூட இல்லை. இப்ப இருக்கற டீசல் விலைக்கு, மீட்டர் கட்டணத்தை ரெண்டு மடங்கா உயர்த்தினா தான் கட்டுப்படியாகும். ஆனா, நான் ரொம்ப நாள் கம்மியான வாடகைக்கு தான் ஓட்டிட்டு இருந்தேன்.

சின்ன வயசுல இருந்தே, சுவாமி விவேகானந்தர் பத்தி படிப்பேன். அப்படியே சித்த மருத்துவம் பத்தியும், தேடித் தேடி படிச்சேன்; இப்பவும் படிச்சுட்டு இருக்கேன். சித்த மருத்துவத்துல நிறைய விஷயங்கள் இருக்கு. நுணுக்கமா கவனிச்சா, நமக்கு அதுல எல்லாத்துக்குமே தீர்வும் இருக்கு.அதனால, என் ஆட்டோவுக்குப் பின்னாடி, எனக்கு தெரிஞ்ச சித்த மருத்துவ குறிப்புகளை எழுதி வைப்பேன். ஒரு தடவை, என்னை பாலோ செஞ்சு வந்த கார்காரங்க, சித்த மருத்துவம் பத்தி பெருமையா பேசி, எனக்கு கைகொடுத்து பாராட்டினாங்க.

இன்னொரு நாள், சித்த மருத்துவர் ஒருத்தங்க, ரொம்ப துாரத்துக்கு என்ன பின்தொடர்ந்து வந்து, பாராட்டிட்டு போனாங்க.நம்ம கனவு நிறைவேறலைங்கற ஒரு விஷயத்துக்காகவே, நாம தோத்துட்டோம்னு அர்த்தம் இல்ல. கடைசி வரை நாம எந்த முயற்சியும் பண்ணாம இருந்தா தான் தோத்துட்டோம்னு அர்த்தம். உங்க கனவுகளுக்கு புது வடிவம் கொடுத்து, அத வேற மாதிரி செயல்படுத்துங்க. அதுல கிடைக்கற வெற்றியும், சந்தோஷத்தைக் கொடுக்கும்!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Subramanian - Chennai,இந்தியா
29-ஜூலை-202001:03:08 IST Report Abuse
P Subramanian Great
Rate this:
Cancel
G.Loganathan - Coimbatore,இந்தியா
28-ஜூலை-202016:24:55 IST Report Abuse
G.Loganathan வாழ்க வையகம் வாழ்க வளமுடன். திரு.நாகராஜ் அவர்களே, தாங்கள் இப்போதும் ஒரு உயர் அதிகாரிதான். சம்பளம் வாங்காத உயர் உயர் அதிகாரி. உங்கள் சேவை தொடரட்டும். மனம் தளர வேண்டாம்.
Rate this:
Cancel
Revathi Archana - madurai,இந்தியா
28-ஜூலை-202011:05:06 IST Report Abuse
Revathi Archana வாழ்த்துக்கள் அண்ணா ..நிச்சயம் ஒரு நாள் உங்களுக்கான நாள் விரைவில் வரும் ..உங்களை போன்றஒரும் இரூக்கிறார்கள் என்று சந்தோசமா இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X