அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மேல்முறையீடு கூடாது' ; ராமதாஸ்

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 'மேல்முறையீடு கூடாது' ; ராமதாஸ்

சென்னை : 'இடஒதுக்கீடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின், உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு என்ற, தவறான அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:மருத்துவ கல்விமாணவர் சேர்க்கைக்கான, அகில இந்திய தொகுப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தடையில்லை. இட ஒதுக்கீட்டின் அளவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இது, சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி.எனவே, மத்திய அரசு, மூன்று மாதம் வரை காத்திருக்காமல், உடனே தமிழக அரசுடன் கலந்து பேசி, குழுவை அமைக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு தொடர்பான, அனைத்து நடைமுறைகளையும் விரைந்து மேற்கொண்டு, அரசாணை பிறப்பிக்க வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும், உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு என்ற, தவறான அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
28-ஜூலை-202008:43:02 IST Report Abuse
vbs manian இவர் யார் மேல் முறையீடு கூடாது என்று சொல்ல.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
28-ஜூலை-202008:02:19 IST Report Abuse
Darmavan கோர்ட் இப்படி சட்டம் இயற்றவேண்டும் இருக்கு அரசுக்கு ஆணையிட முடியாது. இவனுக்கெல்லாம் சாதகமாக இருந்தால் வெற்றி சம நீதி எல்லாம் காற்றில் போகும்.மத்திய அரசு இதை நிராகரிக்க வேண்டும்.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
28-ஜூலை-202007:02:03 IST Report Abuse
GMM ராமதாசும் அன்புமணியும் டாக்டர் . மருத்துவம் பார்த்து வாழவேண்டிய அவசியம் இல்லை . அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார். மருத்துவம் பார்க்க வேண்டியதை கட்டாயம் ஆக்க வேண்டும் .ஒரு அதிகாரி தனது நிர்வாக எல்லைக்கு உட்பட்டு வேலை செய்ய முடியும் . நீதிமன்றத்திற்கும் இது பொருந்த வேண்டும் . அரசியல் வாதிகளுக்கும் பொருந்த வேண்டும் . மருத்துவ தேர்விற்கு வழிகாட்டியது உச்ச நீதிமன்றம் . உயர் நீதிமன்ற மாறுபட்ட புதிய உத்தரவு பிறப்பிக்க முடியுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X