அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உயர் நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்கும்' ; அமைச்சர் ஜெயகுமார்

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : ''மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை, மத்திய அரசு மதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:தமிழகத்தை பொறுத்தவரை, இட ஒதுக்கீடு என்பது, 1921லிருந்து அமலில் உள்ளது. கடந்த, 1991 -- 96ம் ஆண்டு காலத்தில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அனைத்து மாநில முதல்வர்களுக்கும்
 'உயர் நீதிமன்ற தீர்ப்பை  மத்திய அரசு மதிக்கும்' ; அமைச்சர் ஜெயகுமார்

சென்னை : ''மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை, மத்திய அரசு மதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:தமிழகத்தை பொறுத்தவரை, இட ஒதுக்கீடு என்பது, 1921லிருந்து அமலில் உள்ளது. கடந்த, 1991 -- 96ம் ஆண்டு காலத்தில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி, அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி, 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்தார்.இதன் காரணமாக, அவருக்கு அனைத்து கட்சியினரும், 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் கொடுத்தனர். தற்போது, மருத்துவ படிப்பில், இட ஒதுக்கீடு, 50 சதவீதம் வழங்க கோரி, வழக்கு தொடர்ந்தோம்.

இவ்வழக்கில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை, உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது; இது, பாராட்டுக்குரியது.இந்த தீர்ப்பை, மூன்று மாதங்களுக்குள், மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இது, சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. மத்திய அரசு மேல் முறையீடு செய்யாமல், உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கும் என, நம்புகிறோம். இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJI NATESAN - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
28-ஜூலை-202012:26:23 IST Report Abuse
RAJI NATESAN உயர் நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்கும்
Rate this:
Cancel
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
28-ஜூலை-202011:04:23 IST Report Abuse
CHINTHATHIRAI 75% SEATS has to be reserved for TamilNadu Students in ALL THE MEDICAL COLLEGES IN TAMILNADU. No reservation should be provided to anyone regarding e and religion with respect to Medical care. Admission process should also include moral characters, social interest, helping tendency, good health in allaspects and patience and intelligence. Medical Education should be given free of cost enabling the doctors to study peacefully, then only they can serve the society.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
28-ஜூலை-202010:42:38 IST Report Abuse
Girija இவரது நிலை "பிள்ளைக்கு எப்படி இடம் கிடைச்சாலும் பரீட்சை வந்தால் எதிர் நீச்சல் தான் " இடம் கிடைக்கும் 2024 ல் பார்த்துக்கொள்வோம் . சட்டசபை தேர்தலில் பிராமிணர்கள் அனைவரும் நோட்டாவிற்கு தான் ஒட்டு போடவேண்டும் , தேர்தலில் நிற்கவேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X