டில்லி பொருளாதாரத்தை சீரமைக்க வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

டில்லியில், வேலை தேடுவோர் மற்றும் வேலை தருவோர் இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, புதிய இணையதளம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

டில்லியில், கொரோனா பரவலால், கட்டுமானம், சுற்றுலா, ஓட்டல் போன்ற தொழில்களில் துவங்கி, வீட்டு வேலை வரை, அனைத்திலுமே போதுமான ஆட்கள் கிடைக்காமல், தலைநகர் திண்டாடி வருகிறது.இத்துறைகளில் வேலை பார்த்து வந்த, உ.பி., பீஹார் மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், கொரோனா பரவலால் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டதால், வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பது, தலைபோகிற பிரச்னையாக உள்ளது.

விபரம் : இந்த பிரச்னையை சீர்செய்து, டில்லியின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மாநில அரசு களமிறங்கியுள்ளது. அதற்காக, 'மேன்பவர் ஏஜன்சி' பாணியில், http://jobs.delhi.gov.in என்ற புதிய இணையதளத்தை, அரசே துவக்கிஉள்ளது. இதில், அனைத்து துறைகளிலும் உள்ள வேலைவாய்ப்புகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, வேலை தேடுவோர் குறித்த விபரங்களும் இடம் பெற்று உள்ளன.

இந்த இணையதளத்தை, நேற்று டில்லியில் துவக்கி வைத்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:டில்லியில், சரிந்து கொண்டிருக்கும் பொருளா தாரத்தை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைஇதற்காக துவக்கப்பட்டுள்ள இணையதளத்தில், வேலை தேடுவோர், வேலை தரும் நிறுவனங்கள் என, இரு தரப்புமே தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.வேலை தேடுவோருக்கும், வேலை தரும் நிறுவனங்களுக்கும் இடையிலான துாரத்தை குறைக்கும் நடவடிக்கை தான் இது. சொந்த ஊர்களுக்கு திரும்பிய தொழிலாளர்கள் பலரும், டில்லிக்கு திரும்ப துவங்கிஉள்ளனர். அவர்கள், டில்லியை பழைய நிலைமைக்கு கொண்டுவர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X