கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

மும்பை : கொரோனா பாதிப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் இருவரும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மஹா., தலைநகர் மும்பையில் வசிக்கும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், 77, அவரது மகன் அபிஷேக் பச்சன், 44, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, 11ம் தேதி, அங்குள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களை தொடர்ந்து, அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், 46, அவர்களது மகள் ஆராத்யா, 8, இருவரும், அதே மருத்துவ மனையில், 17ம் தேதி அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தொடர் சிகிச்சைக்கு பின், ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது குறித்து, அபிஷேக் பச்சன் வெளியிட்டு உள்ள, 'டுவிட்டர்' பதிவில், 'ஐஸ்வர்யாவுக்கும், மகளுக்கும் தொற்று இல்லை என, பரிசோதனையில் உறுதியானதால், இருவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்' எனக் கூறியுள்ளார். அமிதாபுக்கும், அவரது மகனுக்கும், மருத்துவ சிகிச்சை தொடர்கிறது. கடந்த வாரம், அமிதாப் வெளியிட்டிருந்த, ஒரு பதிவில் கூறியுள்ளதாவது: கொரோனா, மனித தொடர்புகளை துண்டிக்கிறது. வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர், சில வாரங்களுக்கு, மற்றொரு மனிதனை பார்க்க முடியாமல் போவதால், கடுமையான மன அழுத்தம் ஏற்படுகிறது.

மருத்துவமனையிலிருக்கும் நான், இருளில், தனிமையில், துாக்கம் வருவதற்காக கண்களை மூடிக் கொண்டு பாடுகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X