கேரளா,கர்நாடகாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.,பயங்கரவாதிகள்:ஐ.நா.,அதிர்ச்சி தகவல்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
நியூயார்க்:இந்தியாவின் கேரளா கர்நாடக மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதாக ஐநா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்,அல்குவைதா மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பான கண்காணிப்பு குழுவின் அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ், ஹெல்மண்ட் மற்றும் காந்தகார் மாகாணங்களை

நியூயார்க்:இந்தியாவின் கேரளா கர்நாடக மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதாக ஐநா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.latest tamil newsஐ.எஸ்.ஐ.எஸ்,அல்குவைதா மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தொடர்பான கண்காணிப்பு குழுவின் அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ், ஹெல்மண்ட் மற்றும் காந்தகார் மாகாணங்களை சேர்ந்த தீவிரவாத இயக்கங்கள் இந்திய துணை கண்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

இந்திய துணைக் கண்டத்தில் அந்த இயக்கத்திற்கான தலைவர் ஓசாமா மஹ்மூத். இந்த இயக்கத்தில் வங்கதேசம் , பாகிஸ்தான், மியான்மர் நாடுகளை சேர்ந்த150 முதல் 200 பேர் வரையில் உறுப்பினர்களாக உள்ளனர் இந்த இயக்கத்தின் முன்னாள் தலைவர் அசிம் உமர் மரணத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.


latest tamil news
இதற்காக ஐ.எஸ்.ஐ.எல் இயக்கத்தின் பெயராக விலாயா ஆப் ஹிந்த்( இந்திய மாகாணம்) என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையிலான ஐ.எஸ்.ஐ.எல் செயல்பாட்டாளர்கள் உள்ளனர் என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA G india - chennai,இந்தியா
28-ஜூலை-202013:02:57 IST Report Abuse
SIVA G  india ஒவ்வொரு மன்பாத் நிகழ்ச்சியிலும் குறைந்தது 5 தேசதுரோகிகள் தண்டிக்கபட்டதை அறிவியுங்கள். மற்ற எல்ல சாதனைகைளையும் இங்குள்ள தேசதுரோகிகள் முழுங்கிவிடுவார்கள். மோடி பீஷ்மரை போல் செயல்படகூடாது. உறவுகளே ஆனாலும் தர்மம் வேற்றிபெற, சூது நிறைந்தவர்களிடம் சூதாகாவே நடந்து மக்களை காக்கும் கண்ணனாக செயல்பட்டே ஆகவேண்டும். அல்லது சாணக்கியனாக மக்களுக்கா செயல் பட்டே ஆகவேண்டும். காங்கிரஸின் பேசாமடந்தை போல் இருப்பதை மக்கள் விரும்பவில்லை.
Rate this:
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
28-ஜூலை-202011:06:18 IST Report Abuse
Rajalakshmi அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது ? எல்லோருக்கும் தெரிந்த உண்மைதானே .
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
28-ஜூலை-202010:31:27 IST Report Abuse
தமிழ்வேள் தென் மாநிலங்கள் அனைத்தும் அரசியல் ஆதாயம் பார்க்காமல் நேரடியாக குடியரசு தலைவர் ஆடசியின் கீழ் கொண்டுவரவேண்டும் . இந்த இன்றைக்கு காலத்தின் கட்டாயம் .. பெரியார் அண்ணா கருணாவை வளரவிட்டதன் விளைவு இந்த தேசவிரோத பரவல் ...இவற்றுக்கு பின்னணியில் திராவிட கடசிகள் கம்மிகள் காங்கிரஸ் கண்டிப்பாக இருக்கும் ..இவர்களுக்கு தனிநாடு ஆசை காட்டியிருக்க கூட வாய்ப்புகள் அதிகம் ....மாநில போலீசின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பின் மத்திய ரிசர்வ் போலீஸ் எல்லை பாதுகாப்பு படை இந்திய ராணுவத்தின் கம்பெனிகள் நேரடியாக சட்டம் ஒழுங்கு கிரிமினல் நிகழ்வுகளை கையாளும் வண்ணம் சட்ட திருத்தங்கள் தென்மாநிலங்களுக்கு மட்டும் வேண்டும் ....இல்லையேல் தென்மாநிலங்கள் அடுத்த காஷ்மீராக மாறும் அபாயம் அதிகம் உள்ளது ........[உண்மை என்றும் சுடும் ....ஆனால் பெரிய அளவிலான அறுவை சிகிச்சை தவிர வேறு வழி ஒன்றுமில்லை ]
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X