சட்டசபையை கூட்ட கவர்னர் மிஷ்ரா நிபந்தனை! 21 நாள் அவகாசம் அளிக்க வலியுறுத்தல்

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Rajasthan Political Crisis, Kalraj Mishra, Ashok Gehlot, Governor,ஆளுநர்,கவர்னர்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தை கூட்ட, 'எம்.எல்.ஏ.,க்களுக்கு, 21 நாட்களுக்கு முன்பே, 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும். தனி மனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை, கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா விதித்துள்ளார். இதனால், ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையே அதிகார போட்டி நிலவியது. சச்சின் பைலட், தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேருடன் தனி அணியாக செயல்பட்டார். முதல்வர் கெலாட் கூட்டிய, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சச்சின் பைலட் உள்ளிட்ட, 19 பேரும் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, சச்சின் பைலட்டிடமிருந்து துணை முதல்வர் பதவியும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டன. அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, சபாநாயகர், சி.பி.ஜோஷி, 19 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பினார். ஆனால், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, சபாநாயகருக்கு தடை விதித்தது. கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக, பா.ஜ.,வினர் குற்றம் சாட்டினர்.


நம்பிக்கை ஓட்டெடுப்பு


சட்டசபையை கூட்டி, தன் பெரும்பான்மையை நிரூபிக்க முடிவு செய்த, முதல்வர் கெலாட், இது குறித்து, கவர்னர் கல்ராஜ் மிஷ்ராவிடம் மனு அளித்தார். இந்த மனுவில், சட்டசபையை கூட்டுவதற்கான காரணம், தேதி ஆகியவை இல்லை எனக் கூறி, கவர்னர் நிராகரித்தார்.

கடும் அதிருப்தி அடைந்த கெலாட், தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுடன், நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையில் முற்றுகை போராட்டம் நடத்தினார். இதற்கிடையே, கொரோனா வைரஸ் குறித்து விவாதிப்பதற்காகவும், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்வதற்காகவும், வரும், 31க்குள் சட்டசபையை கூட்டுவதாக கூறி, புதிய மனு, கெலாட் சார்பில் கவர்னரிடம் அளிக்கப்பட்டது.

இந்த மனுவையும், கவர்னர், கூடுதல் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார். 'நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த விரும்புகிறீர்களா... கோப்பு களில் அதுபற்றிய குறிப்புகள் இல்லாதது ஏன்?' என, அதில், கவர்னர் கேள்வி எழுப்பியிருந்தார். இது, காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சட்டசபையை கூட்ட, கவர்னர் தாமதிக்கிறார் என்ற தகவல் தவறானது. அது போன்ற எந்த எண்ணமும் கவர்னருக்கு இல்லை. அரசியல் சட்ட விதிகள் என்ன கூறுகின்றனவோ, அதைத் தான் கவர்னர் பின்பற்றுகிறார். மாநிலம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மிக குறுகிய காலத்திற்குள் சட்டசபை கூட்டத்தை கூட்டுவது மிக கடினம்.

சட்டசபையை கூட்டுவதற்கு, 21 நாட்களுக்கு முன், எம்.எல்.ஏ.,க் களுக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும். சட்டசபையில் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், அதை, 'டிவி'யில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு சம்மதித்தால், சட்டசபை கூட்டத்தை கூட்ட தயார். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.


பிரதமரிடம் புகார்


கவர்னரின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது: கவர்னர் கல்ராஜ் மிஷ்ராவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை, கடும் அதிருப்தி அளிக்கிறது. பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசி, இது குறித்து தெரிவித்தேன். சட்டசபையை கூட்டுவதில், கவர்னர் வேண்டுமென்றே தாமதிப்பதாக பிரதமரிடம் கூறினேன். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு நேற்று மனு அனுப்பப்பட்டது. அதில், 'கொரோனா வைரஸ் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தை உடனடியாக கூட்ட, கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ச

ட்டசபை கூட்டப்படுமா, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா, கெலாட் அரசு பிழைக்குமா, அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களின் பதவி பிழைக்குமா என்பது குறித்த எந்த கேள்விக்கும் உறுதியான முடிவு தெரியாத நிலையில், ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.


பகுஜன் எம்.எல்.ஏ.,க்கள் கதி?* பா.ஜ.,வைச் சேர்ந்த, மதன் திலாவர் என்ற, எம்.எல்.ஏ., ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த, ஆறு எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசில் இணைந்தனர். ஆனால், அவர்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' எனக் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக சபாநாயகர் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி, இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

* கடந்த, 2018 டிசம்பரில் நடந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், ஆறு பேர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும், காங்கிரசில் இணைந்தனர். இந்நிலையில், 'ராஜஸ்தான் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும்' என, பகுஜன் சமாஜ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்; இது, அசோக் கெலாட் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது

* ராஜஸ்தான் கவர்னர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி, குஜராத் மாநில காங்கிரசார், காந்தி நகரில் உள்ள கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர். மனுவை வாபஸ் பெறசபாநாயகருக்கு அனுமதிசச்சின் பைலட் உள்ளிட்ட, காங்கிரஸ் அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, ராஜஸ்தான் சபாநாயகருக்கு தடை விதித்து, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, சபாநாயகர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, சபாநாயகர், சி.பி.ஜோஷி சார்பில், நேற்று ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் கூறியதாவது:அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில், இந்த புதிய மனுவால் எந்த பயனும் இல்லை. எனவே, இந்த மனுவை வாபஸ் பெற அனுமதி கோருகிறோம். தேவைப்பட்டால், கூடுதல் விபரங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்வோம். இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்து, மனுவை வாபஸ் பெற, நீதிபதிகள் அனுமதி அளித்ததால், சபாநாயகர் தாக்கல் செய்த, 'அப்பீல்' மனு வாபஸ் பெறப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
28-ஜூலை-202012:21:17 IST Report Abuse
Balasubramanian Ramanathan பாண்டி நாட்டு மகனே , சங்கர் தயாள் சர்மா என்ற கவர்னர் ஆந்திராவில் என் டி ஆர்ருக்கு என்னலாம் செய்தாருனு புத்தகத்தை புரட்டி பார்கவும். எல்லாம் அன்றைக்கு விதைத்த விதை. இன்று மரத்தில் பழங்கள் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.
Rate this:
RAVIKUMAR - chennai,இந்தியா
28-ஜூலை-202012:43:59 IST Report Abuse
RAVIKUMARinnaikku seidha ella thappukkum annaikku seidha oru thappa kaaranam kaatinaal neengal ellam nallvanaga...appidithaana...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
28-ஜூலை-202012:16:39 IST Report Abuse
Malick Raja பொதுவாக அரசியல்வாதிகளுக்கு அவமானங்கள் அவமதிப்புக்கள் என்பது சர்வ சாதாரணம் .. காழ்ப்புணர்ச்சி போன்றவைகளுக்கும் பஞ்சமிருக்காது அந்த வகையில் இந்த கவர்னர் எப்படிநேர்மையாக செயல்படமுடியும் .... மகாராஷ்டிராவில் ,கர்நாடகத்தில் நடந்த நாடகம் நாடறிந்த ஒன்று .. இதெல்லாம் தெரிந்தும் இப்படி 21..நாட்கள் என்று சொல்வது கோமாளித்தனமாகத்தானே இருக்கமுடியும்
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
28-ஜூலை-202010:20:39 IST Report Abuse
பாமரன் பகுஜன் சமாஜ் கட்சியின் சமஉ அத்தனை பேரும் காங்கிரஸில் சேர்ந்து ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் அந்த கட்சி அனுப்பும் கடிதத்தை டிஷ்யூ பேப்பரா தான் உபயோக படுத்தலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X