பொய் சொல்ல மாட்டேன்: ராகுல் கடும் கொந்தளிப்பு!

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (91)
Share
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி : ''இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கவில்லை என, என்னால் பொய் சொல்ல முடியாது. என் அரசியல் வாழ்க்கைக்கே பாதிப்பு ஏற்பட்டாலும், இந்த விஷயத்தில் பொய் சொல்ல மாட்டேன்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

இந்திய - சீன எல்லை பிரச்னையில், பா.ஜ., தலைவர்களுக்கும், காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. லடாக் அருகே, இந்திய நிலப்பரப்பை சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக ராகுல் கூறுகிறார்; பா.ஜ., தலைவர்கள் இதை கடுமையாக மறுக்கின்றனர்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில், நேற்று வெளியிட்ட, 'வீடியோ'வில், ராகுல் கூறியுள்ளதாவது: இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால், ஆக்கிரமிக்கவில்லை என, பொய் சொல்லச் சொல்கின்றனர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில், என்னால் பொய் சொல்ல முடியாது. இதனால், என் அரசியல் வாழ்க்கைக்கே பாதிப்பு ஏற்பட்டாலும், பொய் சொல்ல மாட்டேன்.

மற்றொரு நாடு, நம் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதை நினைத்து, என் ரத்தம் கொதிக்கிறது. கடும் மன உளைச்சலாக உள்ளது. இந்த உண்மையை மறைப்பது தான் தேச விரோதம். இதை மக்களின் கவனத்துக்கு எடுத்துச் சொல்வது தான், தேசபக்தி. எனவே, இந்த விஷயத்தில் உண்மையை மறைக்க மாட்டேன். ஒரு இந்திய குடிமகனாக, இந்த நாடும், நாட்டு மக்களும் தான், எனக்கு முக்கியம். இவ்வாறு, அவர் கூறினார்.


ராணுவத்தினரை அவமதிப்பதா?


ராகுலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ் கூறியுள்ளதாவது: காங்கிரஸ், எம்.பி., ராகுல், பொய் செய்திகளை எல்லாம் உண்மையை போல் கூறுகிறார். ராகுலின் குடும்பம் தான், பல ஆயிரம் கி.மீ., இந்திய நிலப்பரப்பை, சீனாவுக்கு தாரை வார்த்தது. இதெல்லாம் நாட்டு மக்களுக்கு தெரியாது என, ராகுல் நினைக்கிறார்.

ராகுல், மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்கிறார். நாட்டுக்காக சீன எல்லையில் உயிர் தியாகம் செய்த, 20 வீரர்களை அவமதிப்பது போல இருக்கிறது, அவரது கருத்து. தன் தவறை, அவர் திருத்துவது போல் தெரியவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - chennai,இந்தியா
02-ஆக-202018:31:19 IST Report Abuse
rajan எப்படி இப்படி இவரால் பொய் சொல்ல முடிகிறது ? இதுவரை இவர் சொன்னதெல்லாம் உண்மையா??
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
30-ஜூலை-202018:52:02 IST Report Abuse
Tamilnesan இந்தியாவில் மழை காலத்தில் கொசு தொல்லை தாங்க முடியலடா சாமி........
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
29-ஜூலை-202011:24:38 IST Report Abuse
G.Kirubakaran பொய் சொல்லப்போறேன்,பொய் சொல்லப்போறேன் நீ கொஞ்சம் அறிவாளி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X