சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா அணைகளில் நீர் இல்லை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சென்னை : கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், தமிழக பொதுப்பணி துறை அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில், காவிரியின் குறுக்கே ஹேரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், 8.50 டி.எம்.சி., கொள்ளளவு உள்ள ஹேரங்கி அணையில், 7.81 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. ஹேமாவதி அணை, 37.10 டி.எம்.சி., கொள்ளளவு உள்ள நிலையில், 17.48 டி.எம்.சி., நீர் இருப்பு இருக்கிறது. கே.ஆர்.எஸ்., அணையின், 49.45 டி.எம்.சி., கொள்ளளவில், 28.63 டி.எம்.சி., இருப்பு உள்ளது. கபினி அணை, 19.52 டி.எம்.சி., கொள்ளளவு உடையது; 15.31 டி.எம்.சி., நீர் உள்ளது.

மொத்தம், 114.57 டி.எம்.சி., கொள்ளளவு உள்ள, நான்கு அணைகளிலும் சேர்த்து, 69.22 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே எஞ்சி உள்ளது. டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக, சேலம் - மேட்டூர் அணையில் இருந்து, ஜூன், 12 முதல் தொடர்ச்சியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. எனவே, அணையில் நீர் இருப்பு, 29 டி.எம்.சி., யாக குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், டெல்டா பாசனம் கேள்விக்குறியாகும் வாய்ப்புள்ளது. கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து கிடைத்தால், மேட்டூர் அணைக்கு அதிகளவில் நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளது.

தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடையாததால், கர்நாடக அணைகளில், நீர் இருப்பு குறைவாக உள்ளது.இதனால், தமிழக பொதுப்பணி துறை அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே நாளில், கர்நாடக அணைகளில், 46.81 டி.எம்.சி., மட்டுமே இருந்தது. தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால், அணைகளின் நீர் இருப்பு உயர்ந்தது. தமிழகத்திற்கு அதிகஅளவில் நீர் திறக்கப்பட்டது. எனவே, பருவ மழை தீவிரமடையுமா என்ற எதிர்பார்ப்பில், தமிழக அதிகாரிகள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X