பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 10,049 பேர் மீண்டனர்

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 10,049 பேர் மீண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 51 சதவீதமாக உள்ளது.



latest tamil news



இருப்பினும் நேற்று (ஜூலை;27) கேரளாவில் புதிதாக 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 19,727 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை அங்கு 63 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் 9,609 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,417 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் கேரளாவில் மொத்தம் 495 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றன.

புதிதாக பாதிப்பு ஏற்பட்டவர்களில் 75 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 91 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். 483 பேருக்கு கொரோனா நோயாளிகள் மூலம் தொற்று பரவியது கண்டறியப்பட்டது.


latest tamil news



திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 161 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 86 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தில் 70 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 68 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 59 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 41 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 40 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் 38 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 30 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 22 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தில், வயநாடு மாவட்டத்தில் 17 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 15 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. என்று மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
28-ஜூலை-202010:18:30 IST Report Abuse
Balasubramanian Ramanathan பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம கேரள நாடு. தமிழர்கள் பெருமிதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X