சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கடலுார்; மின்சார வரைவு திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், மின்மோட்டார்களுக்கு மாலை அணிவித்து சங்கு ஊதும் நுாதன போராட்டம் நடந்தது.அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், கடலுார் குப்பம்குளத்தில் மீட்டர் மோட்டார்களுக்கு மாலை அணிவித்து, சூடம் ஏற்றி மணியடித்து, சங்கு ஊதினர்.பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பழனி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மா.கம்யூ., சுப்ராயன், விவசாயிகள் ராஜா, பாண்டியன், கண்ணன் பங்கேற்றனர். திருப்பாதிரிப்புலியூர் ஜவான் பவன் அருகில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.குறிஞ்சிப்பாடி, எல்லப்பன்பேட்டை, தையல்குணாம்பட்டினம், வடலுார், பார்வதிபுரம், ஆபத்தாரண புரம், தென்குத்து பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அயன் குறிஞ்சிப்பாடி, உழவர் மன்றம் சார்பில், விவசாயிகள் வயலில் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.நெல்லிக்குப்பம் விவசாயிகள் வீடுகள் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் தென்னரசு, ரவிக்குமார், ராமானுஜம், ஜெயராமன், அமுதா பங்கேற்றனர்.பண்ருட்டியில் பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. வழக்கறிஞர் பரணிசந்தர், கட்சி நிர்வாகிகள் காங்.,முருகன், ம.தி.மு.க.,ரமேஷ், வி.சி.,கிருஷ்ணராஜ், இந்திய கம்யூ., துரை, சக்திவேல், மா. கம்யூ உதயகுமார், அகில இந்திய மஸ்ஜித் கட்சி சவுக்கத்அலி, மக்கள் ஜனநாயக கட்சி ஷேக் நுார்தீன் உட்பட பலர் பங்கேற்றனர்.விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி கிராமத்தில் நடந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட விவசாய சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த புடையூரில் விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் வெற்றிவீரன், கிளை செயலர் நமச்சிவாயம், கோபால கிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் பிரகாஷ் உட்பட பலர் வயலில் உள்ள மின்சார சாதனங்களுக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X