ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் கல்வி உதவி தொகை வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் கல்வி உதவி தொகை வழங்கல்

Added : ஜூலை 27, 2020
Share

சிதம்பரம்; சிதம்பரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.சிதம்பரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் முதல் மூன்று இடங்களை படித்த மாணவிககளுக்கு ஊக்கத்தொகை, ஏழை மாணவி ஒருவருக்கு 10 ஆயிரம் கல்வி உதவி தொகை, உசுப்பூர் ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ஆடை தானம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.உசுப்பூர் ஊராட்சியில் நடந்த நிகழ்விற்கு ஊராட்சி துணைத் தலைவர் சந்திராமோகன், டாக்டர் அர்சுணன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் தென்றல்மணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அண்ணாமலை பல்கலை., பேராசிரியர் பாலக்குமார் துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அரசு சித்த மருத்துவ மனை சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் சிலம்பரசன், வார்டு கவுன்சிலர்கள் சுமதி, சந்தரவடிவேல், கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுமதி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X