பொது செய்தி

தமிழ்நாடு

துறைமுகத்தில் எஸ்.பி., ஆய்வு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் முதுநகர் மீன் இறங்கு தளத்தை எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் ஆய்வு செய்தார்.கடலுார் மாவட்டத்தில் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.ஆனால் பொது மக்கள் மீன் இறங்கு தளத்தில் மீன்கள் வாங்க சமூக இடைவெளியை காற்றிலே பறக்கவிட்டு, முண்டியடித்து மீன் வாங்கிச் செல்கின்றனர்.சமூக இடைவெளி பின்பற்ற, ஏற்கனவே மூடிக் கிடந்த மீன் மார்க்கெட்டிற்கு பதிலாக, முதுநகரில் 2 காலி இடங்களை ஒதுக்கி, அங்கு மார்க்கெட் இயங்கி வருகிறது. இருப்பினும் மக்களிடையே சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி உள்ளது.இதையடுத்து எஸ்., ஸ்ரீஅபிநவ் நேரில் சென்று பார்வையிட்டு, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யாலட்சுமி, டி.எஸ்.பி., சாந்தி, உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மீன் இறங்குதளத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வியாபாரிகள் மட்டும் மீன் வாங்க அனுமதிக்கப்படும். பொது மக்கள் துறைமுகத்தில் மீன் வாங்க கூடாது. அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மார்க்கெட்டிற்கு சென்று தான் வாங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X