பொது செய்தி

தமிழ்நாடு

கணக்கெடுப்பு பணி பி.டி.ஓ., ஆய்வு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

குறிஞ்சிப்பாடி; குறிஞ்சிப்பாடி ஒன்றிய கிராமங்களில் வீடு, வீடாக நோய் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.குறிஞ்சி்ப்பாடி ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட 51 ஊராட்சிகளில் 49, 590 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 174 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை கொண்டு வீடு, வீடாக சென்று நோய் குறித்து கணக்கெடுக்கும் பணி கடந்த 22ம் தேதி துவங்கியது. இருமல், சளி, காய்ச்சல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு குறித்த தகவல்கள் கணக்கெடுப்பு பணியில் சேகரிக்கப்படுகிறது.விருப்பாட்சி, கண்ணாடி ஆகிய கிராமங்களில் இப்பணியை குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ., சதீஷ்குமார் ஆய்வு செய்தார். மண்டல துணை பி.டி.ஓ., செல்வி, ஊராட்சி செயலர்கள் சட்டநாதன், தமிழ்மணி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X