பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாகிராமத்தில் பழரச தொழிற்சாலை அமைக்க வேண்டும்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

பண்ருட்டி; அண்ணாகிராமம் ஒன்றியத்தில் ஜாம், பழரசம் தயார் செய்திடும் தொழிற்சாலை உருவாக்கிட வேண்டும் என மா.கம்யூ., ஒன்றிய கூட்டத்தில் தீர்மானித்தனர்.மா.கம்யூ., அண்ணாகிராமம் ஒன்றிய கூட்டம் ஆதவன் தலைமையில் நடந்தது. மாநில உறுப்பினர் மாதவன் , ஒன்றிய செயலர் லோகநாதன், மாவட்ட குழு கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திருத்துறையூர் சின்னபேட்டை சுடுகாட்டு பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஒன்றியத்தில் பயிரிட்ட கொய்யா விலையில்லாமல் வீணாகிறது. தோட்டக் கலைத்துறை சார்பில், கொய்யாவை கொள்முதல் செய்து விற்க வேண்டும். ஜாம், பழரசம் தயார் செய்யும் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X