பஹ்ரைனில் மேலும் 484 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்பு

Updated : ஜூலை 27, 2020 | Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

மனாமா : பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 484 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அறிவித்துள்ளது.



latest tamil news



உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்திய கொரோனா தாக்கம் வளைகுடா நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் புதிதாக 384 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 39,131 ஆக அதிகரித்தது . நேற்று ஒரு நாளில் 8,829 பேருக்கு தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டது. தொற்று காரணமாக 3 பேர் புதிதாக பலியாகினர். இதுவரை நோய் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்தது.


latest tamil news



தொற்றுக்கு புதிதாக பலியானவர்களில் 199 பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள் எனவும், 177 பேர் உள்ளூர் மக்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் 8 பேர் பயணங்களில் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டது. பஹ்ரைனில் நேற்று ஒர நாளில் கொரோனாவில் இருந்து 484 பேர் மீட்கப்பட்டனர். நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,689 ஆக உயர்ந்தது. தற்போது 48 பேர் தீவிர சிகிச்சையிலும், 98 பேர் பாதிப்புகளுடனும் உள்ளனர். மொத்தம் 3,302 பாதிப்புகளில் 3,254 பாதிப்புகள் நிலையானவை என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X