தமிழ்நாடு

ரூ.3.21 கோடி: தடுப்பு அணைகள், கல்வெர்ட் பணிகளுக்கு ...நிலத்தடி நீர் உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 ரூ.3.21 கோடி: தடுப்பு அணைகள், கல்வெர்ட் பணிகளுக்கு ...நிலத்தடி நீர் உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

பரங்கிப்பேட்டை; கடல் நீர், பாசன வடிகால் வாய்க்கால்களில் உள்ளே புகுந்து செல்லாத வகையில், பரங்கிப்பேட்டை அகரத்தில்,வேளாண்மை பொறியியல் துறை மூலம்,ரூ.3 கோடியே 21 லட்சம் மதிப்பில், மூன்று வாய்க்கால்கள் துார் வாரப்பட்டு 5 இடங்களில் தடுப்பணைகள், 14 கல்வெர்ட்டுகள் அமைக்க உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை கடலில் இருந்து, உவர்ப்பு நீர் அகரம், மானம்பாடி, கரிக்குப்பம், அரியகோஷ்டி பாசன வடிகால்வாய்க்கால்களில் உள்ளே புகுந்துச் சென்றதால், பல ஆண்டுகளாக அப்பகுதியில், விவசாய நிலங்கள் பாதித்தன.மேலும், வீராணம் ஏரியில் இருந்து வரும் தண்ணீர், மழைநீர் தேக்க முடியாமல், வடிகால் வாய்க்கால் வழியாக பரங்கிப்பேட்டை பகுதியில் கடலுக்கு போய் கலந்தது. இதனால் பரங்கிப் பேட்டை அகரம் உட்பட 5 கிராமங்களில், குடிநீர், போர்வெல்கள் உவர்ப்பு நீராக மாறியதால், பொது மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பல ஆண்டுகளாக பாதித்தனர்.

இதனால், அரியகோஷ்டி வாய்க்கால், பாரதி வடிகால் வாய்க்கால், பக்கீம்காம் கால்வாய் உள்ளிட்ட வடிகால்வாய்க்கால்களில் தடுப்பு அணை கட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கைவைத்து வந்தனர்.ரூ.3.21 கோடிஇந்நிலையில் பரங்கிப்பேட்டை கடல்நீர் பாசன வடிகால் வாய்க்கால்களில் உள்ளே புகுந்துச் செல்லாத வகையில்,வேளாண்மை பொறியியல் துறையின், உவர் நில சீரமைப்பு திட்டத்தில், 3 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில், பாரதிவடிகால் வாய்க்கால், அரியகோஷ்டி வாய்க்கால், பக்கீம்காம் கால்வாய் உள்ளிட்ட வாய்க்கால்கள் 8 கி. மீ., துாரம் பொக்லைன் இயந்திரம் மூலம் துார் வாரப்படுகிறது.அகரம், அரியகோஷ்டி, மடுவங்கரை, மானம்பாடி உள்ளிட்ட 5 இடங்களில் தடுப்பு அணைகள், 14 இடங்களில் கல்வெர்ட் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.

இந்த பணிகள் இன்னும் நான்கு மாதங்களில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மகழ்ச்சிஇந்த பணிகள் முடிந்தால், அகரம், அரியகோஷ்டி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், வீராணம்ஏரியில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் மழைநீர் தேக்கி வைக்க முடியும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும், கடல்நீர், பாசன வடிகால் வாய்க்கால் வழியாக உள்ளே புகுந்து வரமுடியாததால், விவசாய நிலங்கள் உவர்ப்பு நிலமாக மாற வாய்ப்பு இல்லை.எம்.எல்.ஏ.,பார்வைவாய்க்கால் துார்வாரும் பணி மற்றும் தடுப்பு அணை கட்டும் பணிகளை நேற்று பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக் காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

அவருடன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர்கள் ராசாங்கம், அசோகன், சேர்மன் கருணாநிதி, உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலன், நகர செயலர் மாரிமுத்து, ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர்ரங்கம்மாள், புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலர் செழியன், சக்கரவர்த்தி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X