தமிழ்நாடு

'ஈகோ': தொற்று தடுப்பு நடவடிக்கையில்...அதிகாரிகளால் பரவும் அபாயம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

தியாகதுருகம் நகரில் 26ம் தேதி வரை கொரோனாவால் 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் இறந்தார். 61 பேர் நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தனர்.

34 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதில் பெரும்பாலோனோர் அரசு சிறப்பு வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட துவக்கத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. வருவாய், பேரூராட்சி, போலீஸ், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டது மக்களிடையே வரவேற்பை பெற்றது.

அதிகாரிகளின் பணி காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தது.இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மக்கள் கூட்டம் நகரில் அதிகரித்தது. இதனால் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியது.துவக்கத்தில் நோய் பாதித்த பகுதியில் தடுப்புக் கட்டைகள் அமைப்பது, கிருமி நாசினி தெளிப்பது, வெளியாட்களை உள்ளே அனுமதிக்காமல் கண்காணிப்பது உள்ளிட்ட பணியை அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து களப்பணியில் வேகம் காட்டினர்.நோய் தொற்று பாதிப்பு யாருக்காவது உறுதியானால் உடனடியாக சுகாதாரத் துறையில் இருந்து மற்ற துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். நாளடைவில் அவர்களுக்குள் இருந்த ஒருங்கிணைப்பில் இடைவெளி ஏற்பட துவங்கியது.

நோய் பாதித்தவர்கள் குறித்த தகவல் பேரூராட்சி அலுவலகத்திற்கு மருத்துவத்துறை மூலம் நேரடியாக தெரிவிக்கப்படுவதில்லை. அவர்களுக்குள் உருவாக்கப்பட்டுள்ள 'வாட்ஸ் ஆப்'குழுவில் மட்டும் நோயாளிகளின் பெயர் மற்றும் முகவரி தெரிவிக்கப்படுகிறது.இதனால் அதிகாரிகளுக்குள் 'ஈகோ' ஏற்பட்டு தடுப்பு நடவடிக்கையில் சுணக்கம் நிலவுகிறது. நேற்று முன்தினம் மட்டும் தியாகதுருகம் நகரில் 10 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. ஆனால், நேற்று மாலை வரை நோய் பாதித்த பகுதியில் எந்த தடுப்பு நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.நோயாளிகளை அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வருவதில் தாமதமானதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இதேபோல் கடந்த வாரம் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் சிலருக்கு நோய் பாதித்த போது அவர்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராமல் அலைகழிப்பு செய்தது ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இப்படி, அரசு துறை அதிகாரிகளிடையே இணக்கமான நிலை இன்றி முரண்பாடு நிலவுவதால் பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் மீண்டும் தங்களின் ஈகோவை மறந்து ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X