பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் மினி டேங்க் பழுது

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் பழுதான குடிநீர் மினி டேங்க்கை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலை விளாந்தாங்கல் செல்லும் நுழைவு வாயிலில் குடிநீர் மினிடேங்க் அமைக்கப்பட்டது. நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகித்தில் பற்றாக்குறை ஏற்படும் போது குடியிருப்பு வாசிகள் பலர் குடிநீர் மினி டேங்க் நீரை பயன்படுத்தி வந்தனர்.கடந்த சில மாதங்களுக்கு குடிநீர் மினி டேங்கில் பழுது ஏற்பட்டு, சுற்றிலும் செடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால், குடியிருப்பு வாசிகள் தண்ணீருக்காக கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, பழுதடைந்த குடிநீர் மினி டேங்க் உடனடியாக சீரமைத்து தண்ணீர் விநியோகத்திற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X