மலேசியாவில் இறந்த கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலேசியாவில் இறந்த கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்

Added : ஜூலை 27, 2020
Share

கள்ளக்குறிச்சி; மலேசியாவில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி, கலெக்டர்அலுவலகத்தில் மனு அளித்தார்.திருக்கோவிலுார் அடுத்த காங்கியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை. இவர், தனது குழந்தைகளுடன் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:எனது கணவர் வெங்கடேசன், 40; கடந்த 2018ம் ஆண்டு கூலி வேலைக்கு மலேசியா சென்றார். பணி முடிந்ததும், தினமும் வீடியோ காலில் எங்களிடம் பேசுவது வழக்கம்.அதேபோன்று, கடந்த 24ம் தேதி இரவு எங்களிடம் பேசினார். மறுநாள் 25ம் தேதி காலை, அவருடன் பணிபுரிபவர்கள், எனக்கு போன் செய்து, உங்கள் கணவர் வெங்கடேசன் இறந்து விட்டார் என தெரிவித்தனர். எனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளது.மேலும், மலேசியாவில் இறந்த எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு 3 பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். வருமானமின்றி தவிக்கும் எனது குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X