பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மறு தேர்வில் 18 பேர் பங்கேற்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ்2 மறு தேர்வில் விண்ணப்பித்திருந்த 28 பேரில் 18 பேர் தேர்வு எழுதினர். 10 பேர் ஆப்சென்ட் ஆகினர்.கள்ளக்குறிச்சியில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் பிளஸ் 2 தேர்வு எழுதாமல் விடுபட்ட மாணவர்களுக்கு நேற்று தேர்வு நடத்தப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேதியியல், கணக்குப் பதிவியல் தேர்வுக்கு கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 12 பேர், திருக்கோவிலுார் கல்வி மாவட்டத்தில் 16 பேர் என 28 பேர் தேர்வுக்கு விண்ணப்பத்திருந்தனர்.இதில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி, சின்னசேலம் பாரதி பள்ளி, பெருமங்கலம் அரசு பள்ளி என மூன்று மையங்களிலும், திருக்கோவிலுார் கல்வி மாவட்டத்தில் வித்யா பாரதி, ஞானானந்தா, அரசு பெண்கள் பள்ளி என மூன்று மையங்களிலும் நேற்று தேர்வு நடந்தது.இதில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 12 பேரில் 7 பேரும், திருக்கோவிலுார் கல்வி மாவட்டத்தில் 16 பேரில் 11 பேரும் பங்கேற்றனர். 10 பேர் தேர்வில் பங்கேற்காத நிலையில் 18 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்த தேர்வினை சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா, கள்ளக்குறிச்சி டி.இ.ஓ., கார்த்திகா ஆகியோர் பார்வையிட்டனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பஸ்கள் இயங்காததால், கள்ளக்குறிச்சி பகுதியில் தங்கியிருந்த பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மறுதேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இவர்களுக்கு உதவிடும் வகையில் கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., கிருஷ்ணபிரியாவின் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கியது.இதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் விண்ணப்பத்திருந்தனர். இவர்கள் மூன்று பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் நடந்த தேர்வில் பங்கேற்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இவர்களில் 2 பேர் மட்டும் நேற்று நடந்த மறுதேர்வில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X