சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டவருடன் தொலைபேசியில் பேச அனுமதி அளிக்கப்படவில்லை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சென்னை : 'வெளிநாட்டில் இருப்பவர்களுடன், தொலைபேசி வழியாக சிறை கைதிகள் பேச, சட்டத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், நளினி, முருகனுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இருவரும், வேலுார் சிறையில் உள்ளனர்.நளினியின் தாயார் பத்மா தாக்கல் செய்த மனு:லண்டனில் இருக்கும் சகோதரி, இலங்கையில் இருக்கும் தாயாரிடம், தினமும், 10 நிமிடங்கள் 'வாட்ஸ் ஆப் வீடியோ'வில், முருகன் பேச, அனுமதி கோரி அரசுக்கு அனுப்பிய மனு மீது, எந்த நடவடிக்கையும் இல்லை. கடிதம்உறவினர்களுடன் 'வாட்ஸ் ஆப் வீடியோ'வில் பேச, என் மகள் நளினி, மருமகன் முருகனை அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

அரசு தரப்பில், கூடுதல் டி.ஜி.பி., சுனில்குமார் சிங் தாக்கல் செய்த பதில் மனுவில், 'வெளிநாட்டில் இருப்பவர்களிடம், வீடியோ கால் வழியாக சிறைவாசிகள் பேச, சிறை விதிகளில் அனுமதி இல்லை' என, கூறப்பட்டு உள்ளது.நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ''மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கேட்டு, மாநில அரசு கடிதம் அனுப்பி உள்ளது. ''வெளியுறவு அமைச்சகம் சம்பந்தப்பட்டது என்பதால், மாநில அரசு முடிவு எடுக்க முடியாது,'' என்றார்.

இதையடுத்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தள்ளிவைப்புமத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன் ஆஜராகி, ''வெளிநாடுகளில் இருப்பவர்களுடன், இங்குள்ள சிறைகளில் இருப்பவர்கள் தொலைபேசி வழியாக பேச, சட்டத்தில் அனுமதி தரப்படவில்லை. ''அதற்கு, பாதுகாப்பு காரணங்கள் உள்ளன. இந்த வழக்கையும், சாதாரணமாக கருத முடியாது,'' என்றார்.இதை சிறப்பு நேர்வாக கருதி, ஏன் பரிசீலிக்கக் கூடாது என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X