பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கமிட்டியில்ரூ.8.84 லட்சம் வர்த்தகம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கமிட்டிக்கு நேற்று விற்பனைக்கு வந்த 262 மூட்டை விவசாய விளை பொருட்கள் 8.84 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.கடந்த ஜனவரியில் துவங்கிய நடப்பு அறுவடை பருவம் தற்போது முடிவடையும் தருவாயில் கள்ளக்குறிச்சி கமிட்டிக்கு விவசாய விளைபொருட்களின் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.அதன்படி நேற்று 150 மூட்டை மக்காச்சோளம், 80 மூட்டை எள், 50 மூட்டை கம்பு, 15 மூட்டை வேர்க்கடலை, தலா 2 மூட்டை உளுந்து கொள்ளு, வரகு உள்ளிட்ட தானியங்கள் விற்பனைக்கு வந்தன.அதில் சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 1,430 ரூபாய், எள் 6,779, கம்பு 2,034, வேர்க்கடலை 6,296, வரகு 1770, உளுந்து 5,799 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது.கமிட்டிக்கு 128 விவசாயிகள் கொண்டு வந்த 262 மூட்டை தானியங்கள் மொத்தமாக 8 லட்சத்து 84 ஆயிரத்து 300க்கு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X