பொது செய்தி

தமிழ்நாடு

கடையடைப்பு முடிந்து மீண்டும் திறப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சின்னசேலம்; சின்னசேலத்தில் கடந்த 4 நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வழக்கம் போல் கடைகளை திறந்ததால் மீண்டும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கியது.சின்னசேலம் தாலுகாவில் 220க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்ட முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, நகர பகுதிக்கு வரும் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டாலும், கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.இதனால் அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் கலந்தாலோசித்து, 4 நாட்களுக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என அறிவித்திருந்தனர். இதனையடுத்து, கடந்த 23ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை 4 நாட்கள் கடைகள் அடைக்கப்பட்டன.இந்நிலையில், நேற்று 27ம் தேதி முதல் வழக்கம் போல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் நான்கு நாட்களாக வெறிச்சோடிய சின்னசேலம் நகர் சாலைகள், மீண்டும் பொதுமக்களின் கூட்டத்தால் அதிகரித்து காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X