பொது செய்தி

தமிழ்நாடு

எல்லாருக்கும் எஸ்.எம்.எஸ்., வேண்டும்!

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
coronavirus, covid19, Social Distance, Mask, Hand Wash

ஊரடங்கில் இருந்து வெளியே வந்து, வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டோம். துருப்பிடித்து போயிருந்த, நம் வாகனத்திலிருந்து, மூளை வரை, அனைத்தையும் துாய்மைப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.

நீண்ட பிரிவிற்கு பின், கைகொடுத்து, கட்டி அணைத்து, கண்ணீர் பெருக்கி, அன்பை பெருக்கிக்கொள்ளும் பழைய நடை முறைக்கு, இன்னும் பல மாதங்கள் தடை போடுங்கள். காரணம், கொரோனா இன்னும் நம்மை விட்டு முழுமையாக அகலவில்லை. ஆகவே, என்னிடமிருந்து உனக்கோ, உன்னிடம் இருந்து எனக்கோ, நம்மிடம் இருந்து நம் குடும்பத்தினருக்கோ, கொரோனாவை கொடுத்து விடக்கூடாது என்பதில், கூடுதல் கவனமும், தெளிவும் தேவை.

மின்சாரம் புழங்கும் இடத்தில் எலும்புக்கூடு படம் போட்டு, 'தொடாதே அபாயம்' என்று எழுதியிருப்பதை, எப்போதும் நினைவில் வைத்து, எதையும், யாரையும் தொடாமல் இருங்கள். தவிர்க்க முடியாமல் தொட வேண்டி வந்தால், உடனே சோப்பு போட்டு நன்றாக கைகழுவி விடுங்கள். முக கவசம் இப்போது நம் உயிர் கவசமாகி விட்டது.

'உங்களுக்கு என்ன சொல்லி விட்டீர்கள்... முக கவசம் மாட்டிக் கொண்டு இயல்பாக மூச்சு விட முடியவில்லை; தெளிவாக பேச்சு வரவில்லை; மூடப்பட்ட பகுதியில் அரிப்பு எடுத்தபடியே இருக்கிறது; காது மடல் வலிக்கிறது' என, முக கவசத்தை துாக்கி எறிய, 100 காரணங்களை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.


காணொலி கூட்டங்களே மேல்


ஆனால், அது, நம் உயிரைக் காக்கும் என்ற ஒரே காரணத்தால், அணிய மறுக்க, மறவாதீர்.ஒரு நாளைக்கு, ஒரு முக கவசத்தை மட்டும் பயன்படுத்துங்கள். பயன்படுத்திய முக கவசத்தை முறைப்படி அழித்து விடுங்கள். துணி மாஸ்க் மற்றும் மறுமுறை பயன்படுத்தும் முக கவசம் என்றால், மூக்கையும், வாயையும் நன்றாக மூடும்படியாக இருக்கட்டும்.

உங்கள் அலுவலக மேஜையில் எப்போதும், 'சானிடைசர்' எனப்படும் கிருமி நாசினி இருக்கட்டும். வேலையை துவங்குவதற்கு முன், மேஜையில் உள்ள பொருட்களை சுத்தம் செய்து விடுங்கள். உங்களுக்கும், உங்கள் பக்கத்தில் வேலை செய்பவருக்கும் குறைந்தபட்சம், ௬ அடி துாரம் இடைவெளி இருக்கட்டும்.

பொதுக் கழிப்பறைகளை உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்க்கவும், லிப்ட் பட்டன், அலுவலக கைப்பிடி போன்ற, பலரது கை விரல்கள் படும் இடத்தில், உங்கள் விரல்கள் படாமல் பார்த்துக் கொள்ளவும்.காரில், அலுவலகத்தில், இயற்கை காற்று, வெளிச்சம் இருந்தால், அதுவே போதுமானது. காணொலி கூட்டங்களே மேல்.

நாம் பத்திரமாக இருப்பது போல, மற்றவர்களும் பத்திரமாக இருப்பதற்கு, நம் அன்பும், அக்கறையும் அவசியம். உங்களுக்கு வந்துள்ளது சாதாரண காய்ச்சலாகவே இருக்கலாம். ஆனால், அது மற்றவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும்.ஆகவே, சளி, இருமல், காய்ச்சல் வந்தால், அலுவலகப் பக்கமே போக வேண்டாம், மூத்தோர், மாற்றுத்திறனாளிகள், உடலுக்கு முடியாதோர் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.

கை குலுக்குவதை விட்டு, வணக்கம் செலுத்தவும், கண்ட கண்ட நேரத்தில் காபி, டீ குடிப்பதை விட்டு, கபசுர குடிநீர் குடிக்கவும். பார்த்ததை எல்லாம் வாங்கி சாப்பிட்டு, வயிற்றை குப்பைக் காடாக்கியதை தவிர்த்து, பாரம்பரிய வீட்டு உணவுகளை சாப்பிடவும். நான் ஒரு மருத்துவர். என் கடமையை செய்வதில் இருந்து, தவறக்கூடாது என்பதால், இந்த கொரோனா காலத்திலும், என் மருத்துவமனையை திறந்து வைத்திருந்தேன். கர்ப்பிணிகளும், எதிர்பாராமல் அடிபட்டு காயம்பட்டோரும் தான் வந்தனரே தவிர, வழக்கமாக வரக்கூடிய வயிற்று வலி, காய்ச்சல், கை, கால் குடைச்சல் நோயாளிகள் யாருமே வரவில்லை.


நீங்களே உணர்ந்து விட்டீர்கள்


காரணம், அவர்களது வீட்டு உணவும், அமைதியான வாழ்க்கை முறையும் தான் என்பதை, நிச்சயமாகக் கூறுவேன். ஆகவே, உங்கள் பலரின் நோய்க்கு, எது மருந்து என்பதை நீங்களே உணர்ந்து விட்டீர்கள்; அதை, ஒரு போதும் இனி மறந்து விடாதீர்கள். இந்த கொரோனா, நம்மை விட்டு முற்றிலுமாக விடைபெறும் வரை, எல்லாருக்கும் தேவை ஒரு, எஸ்.எம்.எஸ்., தான்.

'எஸ்' என்றால், 'சோஷியல் டிஸ்டன்ஸ்' - சமூக இடைவெளி. 'எம்' என்றால், 'மாஸ்க்' அணிந்து இருத்தல். 'எஸ்' என்றால், சோப் மற்றும் சானிடைசர் உபயோகிப்பது. இந்த, எஸ்.எம்.எஸ்., வாசகங்கள், நம் கண்ணில் மட்டுமல்ல, அனைவர் கண்ணிலும் படும்படியாக ஒட்டி வைக்கவும். ஒன்றுபடுவோம்; கொரோனாவை விரட்டியடிப்போம்.

- டாக்டர் ஜெயஸ்ரீ ஷர்மா, மகப்பேறு மருத்துவர், தொடர்புக்கு: 80560 87139

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
28-ஜூலை-202015:58:19 IST Report Abuse
R chandar Good article by doctor very informative and appreciable
Rate this:
Cancel
28-ஜூலை-202010:58:39 IST Report Abuse
Meena krishnan,Dubai அருமையான பதிவு. தெளிவாக உள்ளது. மருத்துவர்கு நன்றி
Rate this:
Cancel
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. - Vilathikulam Pudur,இந்தியா
28-ஜூலை-202010:29:34 IST Report Abuse
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. கொரோனாவிலிருந்து மீண்டு வந்ததும் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை பற்றிய சகோதரியின் கட்டுரை அருமை . கைகொடுத்து, கட்டி அணைத்து, கண்ணீர் பெருக்கி, அன்பை பெருக்கிக்கொள்ளும் பழைய நடை முறைக்கு, இன்னும் பல மாதங்கள் தடை போடுங்கள். இலக்கிய நயத்துடன் எழுதும் மருத்துவ சகோதரிக்கு வாழ்த்துக்கள் . மருத்துவராக தனது கடமையை தவறாது செய்து மக்களுக்கு தன்னால் முடிந்த மருத்துவ சிகிச்சை அளித்தது பாராட்டுதலுக்கு உரியது . நிறைய மருத்துவர்கள் தங்களின் மருத்துவ மனைகளை திறக்க மிக யோசித்த நேரத்தில் தனது மருத்துவ மனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்தது போற்றுதலுக்கு உரியது . இயற்கை பாரம்பரிய உணவுக்கு அனைவரும் மாற வேண்டிய தருணம் இது என்பதையும் அழகாக வலியுறுத்தி உள்ளார் . நம் உணவே நமக்கு மருந்தாகும் . எஸ்.எம்.எஸ் முத்தாய்ப்பான சிந்தனை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X