50 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி 9.18 லட்சம் பேர் குணம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுடில்லி : நேற்று ஒரே நாளில், 50 ஆயிரம் பேரிடம், கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 14 லட்சத்தை கடந்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சக அறிக்கை:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர் களை கண்டறிய, நாடு முழுதும், தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்படி, கடந்த, 24 மணி நேரத்தில், 5.15 லட்சம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 49 ஆயிரத்து, 931 பேரிடம் வைரஸ் தொற்று உறுதியானது.இது, ஒரே நாளில் கண்டறியப்பட்ட, அதிகபட்ச தொற்று எண்ணிக்கையாகும். இதனால், நாட்டில் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 14 லட்சத்து, 35 ஆயிரத்து, 453 ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த பாதிப்பில், 3.76 லட்சம் பேருடன், மஹா., முதலிடத்திலும், தமிழகம், 2.14 லட்சம் பேருடன், இரண்டாம் இடத்திலும், டில்லி, 1.31 லட்சம் பேருடன், மூன்றாம் இடத்திலும் உள்ளன.வைரஸ் தொற்றில் இருந்து, இதுவரை, 9.18 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்; 4.85 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்றில் இருந்து மீட்கப்பட்டோரின் விகிதம், 63.92 சதவீதமாக உயர்ந்து உள்ளது.நாட்டில், நேற்று மட்டும், மஹா.,வில், 267; தமிழகத்தில், 85; கர்நாடகாவில், 82; ஆந்திராவில், 56; மே.வங்கத்தில், 40; உ.பி.,யில், 39; குஜராத்தில், 26; டில்லியில், 21 பேர் உள்ளிட்ட, 708 பேர் வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.இவர்களுடன், பலியானோர் எண்ணிக்கை, 32 ஆயிரத்து, 771 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில், மஹா.,வில், 13 ஆயிரத்து, 636 பேரும், டில்லியில், 3,827; தமிழகத்தில், 3,494; குஜராத்தில், 2,326; கர்நாடகாவில், 1,878; உ.பி.,யில், 1,426; மே.வங்கத்தில், 1,372 பேரும் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.வேகமாக பரவும் கொரோனாஇந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 13 லட்சத்தில் இருந்து, இரு நாட்களில், 14 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி, இந்தியாவில் வைரஸ் தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக, இது குறித்து கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள, 'ப்ளூம்பெர்க் டிராக்கர்' அமைப்பு கூறியுள்ளது. புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில், அமெரிக்கா மற்றும் பிரேசிலை, இந்தியா முந்தியுள்ளது.

உலக அளவில், இந்தியாவும், பிரேசிலும், மிக குறைந்த அளவிலேயே பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. இந்தியாவில், 1,000 பேருக்கு, 11.8 பேரிடமும், பிரேசிலில், 11.93 பேரிடமும், சோதனை நடத்தப்படுகிறது. அமெரிக்காவில், 1,000 பேருக்கு, 184.34 பேரிடம் பரிசோதனை நடத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X