பொது செய்தி

தமிழ்நாடு

மனைவி தற்கொலை: கணவன் மீது வழக்கு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

விழுப்புரம்; வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்டதால், கணவன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.விழுப்புரம் சுதாகர் நகரை சேர்ந்தவர் ஆதிமூலம், 30; பி.இ., பட்டதாரியான இவர், கேரளாவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி ஹரிப்பிரியா, 26; எம்.ஏ., பி.எல்., பட்டதாரி. இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மே 27ம் தேதி திருமணம் நடந்து, தற்போது கயல்விழி என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது.திருமணத்தின்போது, ஹரிப்பிரியாவின் பெற்றோர் 70 சவரன் நகை, ரூ.5 லட்சம் மற்றும் சீர்வரிசை செய்துள்ளனர். ஆதிமூலம் மற்றும் ஹரிப்பிரியா ஆகியோர் சென்னை குரோம்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அப்போது, கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதால், தனது பெற்றோர் வீட்டிற்கு ஹரிப்பிரியா வந்துவிட்டார்.இந்நிலையில், ஹரிப்பிரியாவை, அவரது மாமனார் சாரங்கபாணி கடந்த கடந்த மே 25ம் தேதி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு, குழந்தையை பிடுங்கி வைத்துக்கொண்டு 2 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு, ஹரிப்பிரியாவை வீட்டிலிருந்து வெளியில் அனுப்பியுள்ளனர்.இதையடுத்து, தனது பெற்றோர் வீட்டில் இருந்த ஹரிப்பிரியா, நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ஹரிப்பிரியா இறந்தார்.இது குறித்து ஹரிப்பிரியா தந்தை குணசேகரன் கொடுத்த புகாரின்பேரில், ஆதிமூலம் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X