சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

விழுப்புரம்; வளவனுார் அருகே முன்விரோத தகராறில், ஏழு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து நால்வரை கைது செய்தனர்.விழுப்புரம் அருகே விராட்டிகுப்பம் ரோட்டை சேர்ந்தவர் தண்டபாணி மகன் அய்யப்பன்,28; இவருக்கும், சாலை அகரத்தை சேர்ந்த உறவினர் மகேந்திரன்,40; என்பவருக்கும், வீட்டு மனை பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.நேற்று முன்தினம் அய்யப்பன் மனைவி வினோதினி, மகேந்திரன் வீட்டு வளைகாப்புக்கு சென்றுள்ளார். அவரோடு, அய்யப்பனின் சகோதரி லட்சுமி மகன் பிரதீப்குமார் சென்றுள்ளார். அப்போது, மகேந்திரனோடு, வினோதி, பிரதீப்குமார் ஆகியோருக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது.இதையடுத்து, மகேந்திரன், இவரது உறவினர்கள் அன்பு,28; பிரதீப்,24; வசந்த்,22; முருகன் ஆகியோர் சேர்ந்து பிரதீப்குமார் மற்றும் அவரது உறவினர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதையடுத்து, அய்யப்பன், பிரதீப்குமார் ஆகியோரும் தாக்கியுள்ளனர். இரு தரப்பு புகார்களின் பேரில், வளவனுார் போலீசார் ஏழு பேர் மீது வழக்குப் பதிந்து, மகேந்திரன், அன்பு, பிரதீப், வசந்த்ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X