பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

லாலு பிரசாத்துக்கு பாதிப்பில்லை ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, பீஹார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத், 72, உடல் நலன் பாதிக்கப்பட்டதால், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள 'ரிம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, நேற்று உறுதியானது. அவரது உதவியாளர்கள் மூன்று பேர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, தெரிய வந்துள்ளது.

ராமர் கோவில் விழா ஒளிபரப்புக்கு எதிர்ப்புபுதுடில்லி: உ.பி.,யில் உள்ள அயோத்தியில், ஆக., 5ல் நடைபெறும், ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க விழாவை, துார்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 'இதுபோன்ற, மத சார்புள்ள நிகழ்ச்சிகளை, அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள, மதசார்பற்ற கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட, தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது, பிரசார் பாரதி சட்ட விதிகளுக்கு எதிரானது' என, கேரளாவை சேர்ந்த, இந்திய கம்யூ., கட்சியின் ராஜ்யசபா எம்.பி., பினோய் விஸ்வம், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகருக்கு, கடிதம் எழுதியுள்ளார்.

முதலை கடித்து சிறுவன் பலிகேந்திரபாரா: ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டம், பரிமுகுந்த்பூர் கிராமத்தில் உள்ள ஆற்றில், ருத்ரா நாராயண் பெஹெரா, 16, நேற்று முன்தினம் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஆற்றில் இருந்த முதலைகளில் ஒன்று, சிறுவனை கடித்து குதறியது. இதில் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, மாநில அரசு அறிவித்துள்ளது.

மின் கட்டணத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்புதுடில்லி: டில்லியில், நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணத்தை விட, கூடுதல் கட்டணத்திற்கான, 'பில்' அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அதனை செலுத்தாதவர்களின், மின் இணைப்பைத் துண்டிக்கும், 'நோட்டீசை' திரும்ப பெறக்கோரியும், டில்லி பா.ஜ., பிரிவின் தலைவர் ஆதேஷ் குப்தா, நகரசபை எதிர்க்கட்சி தலைவர், ரம்வீர் பிதுாரி உள்ளிட்டோர், மாநில அரசுக்கு எதிராக, நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், முதல்வரின் இல்லம் நோக்கி பேரணியாக சென்றவர்களை, போலீசார் கலைத்ததுடன், குறிப்பிட்ட நபர்களை கைது செய்தனர்.

தெலுங்கானா தலைமை செயலகம் இடிப்பு ஐதராபாத்:தெலுங்கானாவில், ஐதாராபாத்தில் உள்ள தலைமை செயலகத்தை இடித்து, புதிய தலைமை செயலகம் கட்ட, சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை, அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தலைமை செயலகத்தை இடிக்கும் பணிகள், 7ம் தேதி தொடங்கிய நிலையில், 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக, மாநில அரசு நேற்று கூறியுள்ளது.

கத்தியை விழுங்கிய வாலிபர்புதுடில்லி:ஹரியானாவை சேர்ந்த, 28 வயது வாலிபர், 45 நாட்களுக்கு முன், கஞ்சா கிடைக்காத வேதனையில், 20 செ.மீ., நீளமுள்ள, கத்தியை விழுங்கியுள்ளார். இது, குடும்பத்தினருக்கு தெரியாத நிலையில், பசியின்மை, வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை, டில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில், அவர் விழுங்கிய கத்தி, கல்லீரலில் பாய்ந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, டாக்டர் என்.ஆர்.தாஸ் தலைமையிலான டாக்டர்கள், மூன்று மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு, கத்தியை அகற்றினர். கத்தியை முழுமையாக விழுங்கிய ஒருவருக்கு, சிகிச்சை அளிப்பது, இதுவே முதல்முறை என, டாக்டர்கள் கூறினர்.

ஆயுதப்படை வீரரை கொன்ற நக்சல்கள்ராய்ப்பூர்:சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாட்டத்தில் உள்ள போலீசாரின் முகாமில், சி.ஏ.எப்., எனப்படும் சத்தீஸ்கர் ஆயுதப்படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து, நேற்று காலை அங்கு வந்த நக்சல்கள் இருவர், பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஜிதேந்திர பாக்டே என்ற ஆயுதப்படை வீரர், வீரமரணம் அடைந்தார். வனப்பகுதிக்குள் தப்பிய நக்சல்களை, போலீசார் தேடுகின்றனர்.

மணமக்கள் உள்ளிட்ட 43 பேருக்கு கொரோனாகாசர்கோடு:கேரளாவின் காசர்கோடு மாவட்டம் பிலங்கட்டாவில், 17ம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், அரசின் விதிகளை மீறி, 125க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மணப்பெண்ணின் தந்தைக்கு, சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானதால், திருமண விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், பரிசோதனை நடத்தப்பட்து. இதில், மணமக்கள் உள்ளிட்ட, 43 பேரிடம், வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து, அனைவரும், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X