பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிறப்பு மருத்துவ முகாம்நகராட்சி ஆணையாளர் ஆய்வு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனம் நகராட்சி பகுதியில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், 6 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.திண்டிவனம் நகராட்சி பகுதியில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. இதில் 96 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். 183 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6 பேர் இறந்தனர். திண்டிவனம் நகரில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், நகராட்சி பகுதியிலுள்ள பழைய நகராட்சி அலுவலகம், ரோஷணை, கிடங்கல்(2), இருதயபுரம், இந்திராநகர், சர்க்கார் தோப்பு ஆகிய இடங்களில் சிறப்பு மருத்துவமுகாம் நடக்கின்றது.நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ் சிறப்பு முகாம் நடந்த சர்க்கார் தோப்பு சுந்தர வீரசக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் முன்னாள் கவுன்சிலர் வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X