-சென்னை : சொத்து விற்பனை பத்திரத்தில், ஏதாவது பிழை இருந்தால், அதை திருத்துவதற்கான கட்டண வசூல் கைவிடப்பட உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். வீடு, மனை வாங்கும் போது, அதற்கான கிரைய பத்திரம், பல்வேறு ஆய்வுகளுக்கு பின், சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும். 11 சதவீத தொகைஆனால், பத்திரத்தில் தயாரிப்பு நிலையில், தட்டச்சு மற்றும் வேறு காரணங்களால் சிறு எழுத்து பிழைகள் ஏற்படுவது உண்டு. இத்தகைய பிழைகளை திருத்த சார் - பதிவாளர் அலுவலகத்தை அணுகினால், சொத்து மாறாத நிலையில், குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும்.
சொத்து மாற்றம் இருப்பதாக தெரிய வந்தால், புதிதாக கிரையம் வாங்கும் போது, பதிவாகும் நிலை போன்று, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் என, 11 சதவீத தொகை வசூலிக்கப்படும். சென்னை நீலாங்கரை சார் - பதிவாளர் அலுவலகத்தில், இது போன்று கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சொத்து மாறாத நிலையில், பிழை திருத்தத்துக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என, சில மாதங்களுக்கு முன் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு ஆவணம், பதிவுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிறப்பிக்க வேண்டும் இதையடுத்து, சொத்து மாறாத நிலையில், பத்திர பிழை திருத்தத்திற்கான, கட்டணம் வசூலிப்பை ரத்து செய்ய முடிவாகி உள்ளது. இது தொடர்பான உத்தரவுகளை, பதிவுத்துறை பிறப்பிக்க வேண்டும். இதில், ஐ.ஜி.,யின் பதிலுக்காக, பதிவுத்துறை அதிகாரி கள் காத்திருக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE