விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி தாலுகாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் அண்ணாதுரை பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். சுகாதார துறை, வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல் துறையினரிடம் தாலுகா பகுதிகளில் நோய் பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.பின் கலெக்டர் அண்ணா துரை பேசியதாவது:நோய் தடுப்பு நடவடிக் கையில் கண்காணிப்பு குழுவினர்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். பாதிப்பு பகுதிகளை தனிமை படுத்தி, மருத்துவ முகாம்கள் நடத்தி, எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கவேண்டும். மகளிர் குழுக்களை ஒருங்கிணைத்து வீடு வீடாக சென்று நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப்பணியை மேற்கொள்ள வேண்டும். கடைகளை கண்காணித்து, உத்தரவை கடைபிடிக்காத கடைகளுக்கு பாரபட்சமின்றி சீல் வைக்கவேண்டும் என ஆலோசனை வழங்கினார்.மண்டல கண்காணிப்பு அலுவலர் சப்-கலெக்டர் இந்துமதி, சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில் குமார், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், தாசில்தார் பார்த்தீபன், மண்டல துணை தாசில்தார் முருகதாஸ், தனிதாசில்தார் வெங்கட சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் அய்யனார், பி.டி.ஓ.,க்கள் நந்தகோபாலகிருஷ்ணன், எழிலரசு, பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்தீப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE