சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோபால், சுரேந்திரன் மீது குண்டாஸ்; அல்லா, முருகனை பழித்ததால் அதிரடி

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
karuppar koottam, kantha sasti kavasam, arrest

ஹிந்துக்கள் வழிபடும் கடவுள் முருகரையும், முஸ்லிம்கள் வழிபடும் அல்லாவையும், இழித்தும், பழித்தும், ஆபாசமாக பேசியும், சமூக வலைதளத்தில், 'வீடியோ' வெளியிட்ட, கருப்பர் கூட்டம் சுரேந்திரன், ஹிந்து தமிழர் பேரவை நிர்வாகி கோபால் ஆகியோர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


மோதல்


கருப்பர் கூட்டம் என்ற, 'யு டியூப்' சேனலில், தொடர்ந்து, ஹிந்துக்கள் மனம் புண்படும்படி, அவர்கள் பின்பற்றும் மதம் மற்றும் வழிபடும் கடவுள்கள் குறித்து, இழித்தும், பழித்தும், வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில், முருகப்பெருமானை போற்றி பாடப்படும், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக சித்தரித்து, வீடியோ வெளியிட்டு இருந்தனர். இது, ஹிந்துக்கள் மத்தியில் மட்டுமின்றி, சமய நல்லிணக்க ஆர்வலர்களிடமும், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தமிழக பா.ஜ., வழக்கறிஞர் அணியினர் மற்றும் ஹிந்து அமைப்பினர், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், 'கருப்பர் கூட்டம், யு டியூப் சேனலை முடக்க வேண்டும். அதன் நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து, சென்னை, மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்தல், ஜாதி, மத மோதலை துாண்டுதல் உட்பட, ஐந்து சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின், சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த, கருப்பர் கூட்டம், யு டியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன், 49, என்பவரை கைது செய்தனர். இதையடுத்து, புதுச்சேரியில், மற்றொரு நிர்வாகியான, சுரேந்திரன் நடராஜன், 36, என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்த, சோமசுந்தரம், மறைமலை நகரைச் சேர்ந்த, குகன் ஆகியோரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவர்களில் செந்தில்வாசனை, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, மூன்று நாட்கள், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.அப்போது, செந்தில்வாசன், தி.மு.க.,வின் ஐ.டி., அணி எனப்படும், தகவல் தொடர்பு அணியில், முக்கிய பொறுப்பில் இருந்தது தெரிய வந்தது. இதன் வாயிலாக, கருப்பர் கூட்டம் பின்னணியில், தி.மு.க., இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.


கைது


மேலும், யு டியூப் சேனலுக்கான நிதி திரட்டுதல் உள்ளிட்ட பணிகளை, செந்தில்வாசன் தான் கவனித்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட, நால்வரின், மொபைல் போன்கள், 'லேப்டாப்' மற்றும் சென்னை, தி.நகரில் உள்ள, கருப்பர் கூட்டம் அலுவலகத்தில் இருந்து, கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களில் இருந்து, ஏராளமான தகவல்களை, போலீசார் திரட்டி உள்ளனர்.

இவர்கள், ஹிந்துக்களுக்கு எதிராக மிகப்பெரிய சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்ட, சென்னை, ராமாபுரத்தைச் சேர்ந்த, சுரேந்திரன் நடராஜனை, நேற்று கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

அதேபோல, சென்னை, நந்தம்பாக்கம், மேற்கு மாட வீதியை சேர்ந்தவர், கோபால், 47; ஹிந்து தமிழர் பேரவை நிர்வாகி. இவர், முஸ்லிம் மதம் மற்றும் அதை பின்பற்றுவோர் பற்றி அவதுாறாக பேசி, வீடியோ வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நந்தம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ், போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், கோபாலை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கமிஷனர் உத்தரவின்படி, கோபாலையும் நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில், போலீசார் கைது செய்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
31-ஜூலை-202009:03:20 IST Report Abuse
RaajaRaja Cholan சாமியார் வேஷம் போட்டு அடுத்த மதத்தை இழிவு படுத்துவது , எப்படி இருக்குது தெரியுமா நீ இருக்கும் மதத்தை வேண்டும் என்று தெரிந்தே கேவல படுத்துவது போல் உள்ளது , இவன் நோக்கம் என்ன இவன் வேடம் தரித்திக்கும் மதத்தை இழிவு படுத்துவதோ?. உண்மையான நான் அறிந்த விஷயம் தெரிந்த மத வாதிகள் அணைத்து மதத்தையும் மதிக்க தெரிந்தவர்களாக இருப்பர் . இவன் போல் அரை குறைகள் மதத்திற்கு பிடித்த சாபம்
Rate this:
Cancel
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
29-ஜூலை-202007:17:10 IST Report Abuse
Chowkidar Modikumar இந்தியாவில் வசிக்கும் எண்பது சதவிகித மக்கள் இந்துக்கள், இந்துக்கள் மற்றும் மற்ற மதத்தவர்களிடம் பிரிவினை ஏற்படுத்த கறுப்பர் கூட்டம் இந்தியாவின் மீது மறைமுக போர் தொடுத்துள்ளது. இவர்களை தீவிரவாதிகளாக வகைப்படுத்தி விசாரணைக்கு அழைத்து செல்லும் போது போலீசை தாக்கி தப்பிக்க முயற்சி செய்தார்கள் என்று சொல்லி என்கவுண்டர் செய்தால் எதிர்காலத்தில் இதுபோன்ற மத துவேஷங்கள் நடக்காமல் இருக்கும். தமிழக முதல்வரே, உங்கள் உருவில் முருக பெருமானின் உருவெடுத்து இந்த கயவர்களை வதம் செய்யுங்கள். முருகனின் கவசம் உங்கள் ஆட்சியை பொற்காலமாக்கும் , அடுத்து வருடம் வரும் தேர்தலில் நீங்களே முருகனின் அருளால் பெரும்பான்மையுடன் வாகை சூடுவீர்கள்.
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
28-ஜூலை-202023:36:22 IST Report Abuse
Rajan அப்போ அந்த சொரியான் சிலை எல்லாம் appura படுத்துடுவீங்களா எஜமான்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X