கூடுதல் ஆம்புலன்ஸ் இயக்க அமைச்சர் உத்தரவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் ஆம்புலன்ஸ் இயக்க அமைச்சர் உத்தரவு

Added : ஜூலை 27, 2020
Share

விக்கிரவாண்டி; விழுப்புரம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை குறித்து தினமலர் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து கூடுதல் ஆம்புலன்ஸ்களை இயக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து தினமலரில் விரிவான செய்தி வெளியானது. செய்தி எதிரொலி காரணமாக , நோய் தொற்று பரவல் குறித்து ஆய்வு கூட்டம் நடத்திய அமைச்சர் சண்முகம், மாவட்டத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வசதியாக கூடுதலாக நான்கு தனியார் ஆம்புலன்ஸ்களை வாடைகைக்கு அமர்த்த கலெக்டர் அண்ணாதுரையிடம் உத்தரவிட்டார்.அதன் பேரில் கலெக்டர் நேற்று முதல் 4 தனியார் ஆம்புலன்ஸ்களை வாடைகைக்கு அமர்த்தி அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு உடைகளை வழங்கினர்.திண்டிவனம், விழுப்புரம் என இரண்டு நகராட்சி மற்றும் 13 வட்டார மருத்துவமனைகளில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 11 ஆம்புலன்ஸ்கள் செயல்பட தொடங்கியுள்ளன.அமைச்சர் மற்றும் கலெக்டரின் நடவடிக்கை களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X